தாடி, மீசையில் இருந்து மீண்டும் 'சாக்லேட் பாய்' ஆன மேடி
மும்பை: தனு வெட்ஸ் மனு 2 படத்திற்காக முடியை வெட்டி கிளீன் ஷேவ் செய்துள்ள மாதவன் தன்னுடைய புதிய லுக் போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மாதவன் என்ற பெயரைச் சொன்னாலே அவரது சிரிப்பு தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அவர் தற்போது 1 ஆங்கிலப் படம், 2 இந்தி படங்கள் மற்றும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

நீள முடியும், தாடி, மீசையுமாக சில மாதங்கள் சுற்றிக் கொண்டிருந்த மாதவன் தான் நடித்து வரும் இந்தி படமான தனு வெட்ஸ் மனு 2 படத்திற்காக முடியை வெட்டி, கிளீன் ஷேவ் செய்துள்ளார். தனது புது கெட்டப் போட்டோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
முடிவு சிறியதாகிவிட்டது. தாடி போயாச்சு. பழையபடி ஆகிவிட்டேன். ஆனால் ஏதோ வித்தியாசமாக உள்ளது. புதிய லுக் படங்களை போஸ்ட் செய்ய வெட்கமாக உள்ளது. தனு வெட்ஸ் மனு லுக் என்று தெரிவித்துள்ளார்.
மாதவனின் போட்டோவை பார்த்தவர்கள் பலரும் அவரை புகழ்ந்து தள்ளினார்கள். இதை பார்த்த மாதவன் உங்கள் பாராட்டுக்கு நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











