ஹாலிவுட்டுக்காக "பாடி", பாலிவுட்டுக்காக "தாடி".. இதுதான் லேட்டஸ்ட் "மேடி"!
சென்னை: நடிகர் மாதவன் தனு வெட்ஸ் மனு 2 இந்தி படத்திற்காக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் உள்ளார்.
சாக்லேட் பாயாக கோலிவுட் வந்தவர் மாதவன். இயக்குனர் மணிரத்னத்தின் மனம் கவர்ந்த ஹீரோ மேடி தான். தனது சிரிப்பாலேயே ரசிகைகளை கவர்ந்தவர். அவர் கோலிவுட் தவரி பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஹாலிவுட்டும் சென்றுள்ளார்.

ஹாலிவுட்
நைட் ஆப் தி லிவிங் டெட்- ஆரிஜின்ஸ் 3டி படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இதற்காக அவர் ஜிம்முக்கு சென்று உடம்பை கும்மென்று ஆக்கியுள்ளார்.

இறுதிச் சுற்று
தமிழில் அவர் இறுதிச் சுற்று படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார்.

பாலிவுட்
இந்தியில் மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் மாதவன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தாடி
தனு வெட்ஸ் மனு 2 படத்திற்காக அவர் தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் உள்ளார்.

பரமசிவன்
மேடியின் புதிய லுக் பரமசிவன் படத்தில் அஜீத் நீளமான முடியும், தாடியும் வளர்த்தது போன்று உள்ளது.


Click it and Unblock the Notifications











