குத்துச்சண்டை வீரராக களமிறங்கும் மாதவன்
நடிகர் மாதவன் குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளம்பர மாடலாக நடித்து மணிரத்னம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். பாலிவுட் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் 'நைட் ஆப் தி லிவிட் டெட்' படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இந்நிலையில், அடுத்ததாக இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

குத்துச்சண்டை வீரர்
இப்படத்தில் மாதவன் ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரராக நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக ஹாலிவுட் நடிகர்களுக்கு பயிற்சியளிப்பவர்களிடம் அமெச்சூர் குத்துச் சண்டை கற்று வருகிறார்.

புது ஹேர் ஸ்டைல், தாடி
இந்த படத்தில் மாதவன் நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும், வலிமையான உடல்வாகுடனும் தோன்றுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தொழில்முறை குத்துச் சண்டை வீரர்களும் நடிக்க இருக்கிறார்.

கஷ்டம்தான்
உடல்ரீதியாக மிகவும் சவாலான கதாபாத்திரம் இது. இதற்காக நான் அதிக நேரம் உடற்பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார் மாதவன்.

தாக்குப்பிடிக்க முடியலையே
இந்தப் படத்தில் மாதவனின் கதாபாத்திரம் பற்றிக் கேட்டபோது, முதன்முதலாக குத்துச் சண்டை மேடையில் ஏறியபோது தன்னால் ஒரு நிமிடம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றார். வரும் டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











