மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி கன்னத்தில் கை வைத்த ஷாருக்கான்.. ஃபேமிலி மீட்டிங் வீடியோ
மும்பை: தமிழ் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களில் கடந்த சில மாதங்களாகவே அதிகம் விவாதிக்கப்படும் பெயர்களில் ஒன்றாக இருப்பது மாதம்பட்டி ரங்கராஜ். திரைப்பட நடிகர், சமையல் கலைஞர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் என அறியப்பட்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதுதான் பெரும் சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக வழக்கு விசாரணையில் இருக்கிறது. இப்படி இருக்கும்போது தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானைச் சந்தித்துள்ளார். அப்போது, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதியின் கன்னத்தை தொட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், ஷாருக். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து, ஏமாற்றி விட்டார் என்றும், தனது குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்தார். இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள், நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜாய் கிரிசல்ட்டா ஒவ்வொன்றாக வெளியிட, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஆனது.

மாதம்பட்டி ரங்கராஜ்: இப்படி இருக்கும்போது, இது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே தனது குழந்தையின் அப்பா ரங்கராஜ் தான், அவரை டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வரச்சொன்னால் வரமாட்டேன் என்கிறார் என்று கடுமையாக பதிவிட்டு வந்தார் ஜாய் கிரிசல்ட்டா. இது மட்டும் இல்லாமல் ஜாய் கிரிசல்ட்டா தன்னை பிளாக் மெயில் செய்து தான் திருமணமே செய்து கொண்டார் என்று எல்லாம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஷாருக் கான்: இது மட்டும் இல்லாமல், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, நான் கடைசி வரை எனது கணவருக்கு துணையாக இருப்பேன் என்று எல்லாம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படி இருக்கையில் ஜாய் கிரிசல்ட்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து ரங்கராஜுக்கு எதிராக ஏதாவது கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். இப்படியான நிலையில் தனது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு மகள்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். அப்போது அங்கு பாலிவுட் கிங் ஷாருக்கானைச் சந்தித்தார். உடனே அவருடன் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதியின் கன்னத்தில் கை வைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











