சோஷியல் மீடியாவில் குடுமிபிடி சண்டை.. கூலாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.. சபாஷ் சரியான போட்டி!
சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, தான் கருவுற்ற நிலையில் தன்னை விட்டு சென்றுவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்து வரும் நிலையில், கடந்த மாதம் ராஜூவ் காந்தி மருத்துவமனையில் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டது. இதில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ்: இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பராமரிப்பு வழங்க தயாராக இருப்பதாக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டியுடன் இருக்கும் போட்டோபை பகிர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக் கொண்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் அவருடன் இருப்பேன் என்றும், மகனை ஒருபோதும் விட்டு செல்ல மாட்டேன் கூறியுள்ளார். "இனி என்ன நடக்கிறது என்பதை காத்திருப்போம்" என பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதி ரங்கராஜ்: இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனது குடும்பத்துடன் திருப்பதியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "என் குடும்பத்தை மிரட்டுவதற்கோ அல்லது அவதூறு பரப்புவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொண்டாலும், என் குழந்தைகளையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன்" என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
கூலாக இருக்கிறார்: ஒரு பக்கம் ஜாய் கிரிசில்டா மற்றொரு பக்கம் ஸ்ருதி என இரண்டு பெண்களும் சமூக வலைதளங்களில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு எல்லாம் மூலக்காரணமான மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவிதமான சலனமும் இல்லாமல் குடும்பத்தோடு போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார், குழந்தைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? செய்த தவறுக்கு தண்டனை இல்லையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications