மாதம்பட்டி ரங்கராஜை குக் வித் கோமாளியில் இப்படி ஓட்டுறாங்களே.. என்ன கொடுமை சார் இது?
சென்னை: மாதம்படி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் நடந்தபோதே ஜாய் கர்ப்பமாகவும் இருந்தார். ஆனால் அவரிடமிருந்து மாதம்பட்டி விலக முயன்றபோது இந்த ரிலேஷன்ஷிப்பை பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார். ஒருவழியாக டிஎன்ஏ டெஸ்டில் எல்லாம் கலந்துகொண்டார் ரங்கராஜ். இப்போது ஜாய் கிரிஸில்டாவையும், அவருக்கு பிறந்த மகனையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் விஐபி வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமைப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஆளும் நன்றாக இருப்பார் என்பதால் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றது. முக்கியமாக ரங்கராஜின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை அதற்கு பிறகு அவர் நடிக்கவே இல்லை. அதேசமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்படுகிறார்.

முளைத்த பிரச்னை: இப்படி அவரது வண்டி நல்லபடியாக போய்க்கொண்டிருக்கையில் ஜாய் கிரிஸில்டாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் இருக்கிறார். இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். அதேபோல் ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணமாகி விவகரத்தாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்கா அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் நடந்தபோதே ஜாய் கிரிஸில்டா கர்ப்பமாக இருந்தாராம்.
நீண்ட பிரச்னை: தன்னிடமிருந்து மாதம்பட்டி விலக நினைத்ததை அடுத்து தங்களுக்குள் நடந்த ரகசிய திருமணத்தை புகைப்பட ஆதாரத்தோடு வெளியே கொண்டு வந்தார். அதனை முதலில் மறுத்துவிட்டார் மாதம்பட்டி. உடனே காண்டான கிரிஸில்டா; மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் கொஞ்சி கொஞ்சி பேசிய வீடியோவை எல்லாம் ஒவ்வொன்றாக களமிறக்கி அவரை நிலைகுலைய வைத்துவிட்டார். இனிமேலும் அவரை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்துகொண்ட ரங்கராஜ் இந்த விஷயத்தில் சைலெண்ட்டாக கோ ஆப்ரேட் செய்ய ஆரம்பித்தார்.
டிஎன்ஏ ரிசல்ட்: தனது முதல் மனைவியுடன் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான அவர்; ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபியுங்கள் என சொல்லிவிட்டு வந்தவர்தான்; அதற்கு பிறகு செல்லவே இல்லை. அதை வைத்தும் பல போஸ்ட்டுகளை போட்டுவிட்டார் கிரிஸில்டா. பிறகு ஒருவழியாக நீண்ட இழுத்தடிப்புக்கு பின் மரபணு சோதனையில் பங்கேற்றார். அதில் அந்தக் குழந்தை அவருடையதுதான் என்பது உறுதியானது. இதனால் ஜாயையும், மகன் ராகா ரங்கராஜையும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
ஓட்டிய குக் வித் கோமாளி: அதனை ஜாய் கிரிஸில்டாவும் உறுதிப்படுத்தியிருந்தார். இதை பார்த்து காண்டான ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி காட்டமாக பதிவிட்டு கிரிஸில்டாவை மறைமுகமாக தாக்கியிருந்தார். அதற்கு இவரும் பதிலடி கொடுத்திருந்தார். இப்படி புது பஞ்சாயத்து முளைப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரங்கராஜை செமயாக கிண்டல் அடித்திருக்கிறார்கள். அதாவது மாமி வேடமிட்டு வந்த ஒருவரிடம் ரங்கராஜை காண்பித்து அவர் யார் என்று தெரியுமா என மாகாபா ஆனந்த் கேட்க; அந்த நபரோ இவரையா தெரியாது.. தபால் போட வேண்டும் பெட்டி தயங்கி தயங்கி பேசினால் அவர்தான் மாதம்பட்டி என ஓட்டிவிட்டார்.
ஜாய் கிரிஸில்டாவிடம் ரங்கராஜ் பேசிய ஸ்டைலை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்துவருகிறார்கள். இதற்கு முன்னர் குரேஷி ஒரு வீடியோவையே வெளியிட்டிருந்தார். சமீபத்தில் வெளியான TN 2026 படத்திலும் அதை ஓட்டி காட்சி வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் ரங்கராஜ் ரொம்பவே ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்வதால் பிரச்னை எதுவும் வெடிக்காமல் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
