போத்தன்-மாதவன் படம் போண்டி!

By Staff

மாதவன் நடிக்க, பிரதாப் போத்தன் இயக்க, ருக்மணி என்ற அழகான நாயகி நடிக்க உருவாகவிருந்த ஒரு நாள் போதுமா படம் டிராப் ஆகி விட்டதாம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தார் பிரதாப் போத்தன். இதற்காக மாதவனை நாயகனாகப் போட்டார். ருக்மணி என்ற அழகிய நாயகி இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

கனடாவில் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டிருந்தார் போத்தன். ஆனால் இப்படம் சில பல காரணங்களினால் டிராப் ஆகி விட்டதாம். என்ன காரணம் என்று விசாரித்தார், கனடாவுக்கு ஷூட்டிங் போக விசா கிடைக்கா தாமதமானதே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. விசா கிடைக்க 2 மாதங்கள் ஆகும் என்று கனடா தூதரகம் கூறி விட்டதாம்.

அத்தனை நாட்களுக்குக் காத்திருக்க முடியாது என்று மாதவன் கூறி விட்டாராம். தற்போது மாதவன், லீலை மற்றும் வாழ்த்துக்கள் என இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் 2 படங்களிலும் புக் ஆகியுள்ளார்.

எனவே போத்தனுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். வேண்டுமானால் நவம்பரில் கால்ஷீட் கொடுப்பதாக மாதவன் கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளரால் அத்தனை நாட்களுக்குப் பொறுத்திருக்க முடியாதாம்.

நிலைமையப் புரிந்து கொண்ட போத்தன் படத்தையே டிராப் செய்து விட்டாராம். இந்தப் படத்தை வேறு தயாரிப்பாளரை வைத்து அடுத்த ஆண்டு எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் போத்தன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X