ஹீரோ .. ஹீரோ ..

By Staff

மாதவனின் ஏக்கம் இந்த ஜென்மத்தில் நிறைவேறாது என்றே தெரிகிறது.

பிறகு...? சுத்தமான தமிழ் பேசும் பெண் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரே! நடக்கிற காரியமா இது?

இதுவரை தனக்கேற்ற சரியான ஜோடியுடன் நடிக்கவில்லை என்று வருத்தப்படும் மாதவன் சுத்தமான, ஒரு பிழையும் இல்லாமல் தமிழ் பேசும் ஒரு பெண்ணுடன்ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுகிறார்.

அப்படிப்பட்ட பெண் கிடைத்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். நானும் நல்ல தமிழ் பேச முயற்சிப்பேன் என்கிறார் மாதவன்.

டெயில் பீஸ்: மாதவனும் அவரது மனைவி சரிதாவும் ஒரு தமிழ் வாத்தியாரிடம் நன்கு பேச, எழுத மற்றும் படிப்பதற்குக்கற்று வருகிறார்களாம்.

அட்ரா சக்கை, அட்ரா சக்கை !

அம்சவிர்தனை தூக்கிட்டாங்கப்பா!

அம்சவிர்தனுக்கு நேரம் சரியில்லை போலும். படம் தான் ஓடவில்லை என்று பார்த்தால் புக் ஆன படத்திலும் கூடஅவர் தூக்கியடிக்கப்படுகிறார்.

"புன்னகை தேசம்" படத்தில் அம்சவிர்தனின் நடிப்பைப் பார்த்து அசந்த சில தயாரிப்பாளர்கள் அவரைத் தனிஹீரோவாக வைத்து படம் செய்யத் தொடங்கினர்.

அவற்றில் சமீபத்தில் வெளியான "ஜூனியர் சீனியர்" மற்றும் "நேற்று வரை நீ யாரோ" ஆகிய படங்கள் வந்தவேகதில் மண்ணைக் கவ்வி விட்டன. இதனால் அம்சவிர்தனின் நிலைமை மோசமாகி உள்ளதாம்.

"அம்மு" என்ற படத்தில் ஹீரோவாக அம்சவிர்தன் புக் ஆகியிருந்தார். "வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய"கதையாக இப்போது அதிலிருந்தும் அவரைத் தூக்கி விட்டு, புது ஹீரோவைத் தேடி வருகிறார்களாம். இதனால்நொந்து போயுள்ளார் அம்சவிர்தன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X