GOAT படத்துக்கு நோ சொன்ன 2 ஹீரோக்கள்.. என்ன காரணம் தெரியுமா?.. நடிச்சிருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நாட்கள் செல்ல செல்ல பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்தனர். அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்‌ஷன் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் GOAT படத்துக்கு இரண்டு ஹீரோக்கள் நோ சொன்னதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. வெங்கட்டின் படங்கள் என்றாலே ட்விஸ்ட்டுக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதாலும், விஜய்யுடன் முதன்முறையாக அவர் கூட்டணி வைத்திருப்பதாலும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. கடந்த 5ஆம் தேதி ரிலீஸான படத்துக்கு அதே எதிர்பார்ப்பு ரசிகரக்ள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ப்ரீ புக்கிங்கிலேயே படத்தின் டிக்கெட் விற்பனை மாஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

vijay goat

திரையரங்கில் திருவிழா: GOAT படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு சென்ற ரசிகர்கள் தியேட்டரை திருவிழா கோலம் பூண வைத்துவிட்டார்கள். பட்டாசு வெடித்து கட் அவுட்டுகளுக்கு ஏகப்பட்ட அபிஷேகங்கள் செய்து அதகளம் செய்தனர். எப்போதும் விஜய்யின் படம் என்றால் முதல் நாள் பண்டிகைதான் என்பதை GOAT படமும் நிரூபித்திருக்கிறது என்பதுதான் கள உண்மை.

பாசிட்டிவ் விமர்சனம்: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து எந்த மாதிரியான சம்பவம் செய்யப்போகிறார் என்ற ஆவலோடு படம் பார்க்க சென்ற தங்களுக்கு வெங்கட் செம ட்ரீட் கொடுத்திருக்கிறார் என விஜய் ரசிகர்கள் சொன்னார்கள். மேலும், ஆக்‌ஷன், காமெடி, செண்ட்டிமெண்ட் என அனைத்தையும் கலந்துகட்டி ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜை கொடுத்து தங்களை மகிழ்வித்துவிட்டார் என்றும் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதேசமயம் முதல் நாள் எப்போதும் ரசிகர்கள் அப்படித்தான் கூறுவார்கள் இரண்டு மற்றும் மூன்றாம் நாளில்தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியும் என்றும் ஒருதரப்பினர் கூறினார்கள்.

கலவையான விமர்சனம்: அதன்படிதான் நாட்கள் செல்ல செல்ல ரிசல்ட் வந்துகொண்டிருக்கிறது. அதாவது முதல் நாள் பாராட்டிய விஜய் ரசிகர்களை தவிர்த்து பொதுவான ரசிகர்கள் படம் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். பழைய காலத்து கதை,திரைக்கதையில் ஒன்றுமே இல்லை; படத்தின் நீளம் அநியாயத்துக்கு அதிகமாக இருக்கிறது; யுவனின் ரீ ரெக்கார்டிங்கும் சரியில்லை என்று ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

வசூலிலும் அடி: படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி ரூபாய் என்று அறிவித்த தயாரிப்பு நிறுவனம்; இதுவரை 300 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாகவே படத்தின் வசூல் செமத்தியாக அடி வாங்கிவிட்டதாகவே பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றுகூட படம் சுமாரான வசூலை பெற்றிருந்தது என்றும் கூறப்படுகிறது.

மறுத்த ஹீரோக்கள்: இதற்கிடையே GOAT படத்தில் மோகன் வில்லனாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருந்தனர். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி முதலில் மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மாதவன் மற்றும் அரவிந்த் சாமியிடம் வெங்கட் பிரபு கேட்டதாகவும்; ஆனால் தங்களிடம் கால்ஷீட் இல்லை என்று அவர் நோ சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X