வித்தியாசமான முறையில் எடையை குறைத்த மாதவன்.. செம ஜடியாவா இருக்கே.. எப்படினு நீங்களே பாருங்க!
சென்னை : இதுவரை ஹீரோவாக மட்டும் வலம் வந்த நடிகர் மாதவன் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் வில்லன் கலந்த ஹீரோவாக நடித்து அசத்தி இருக்கிறார்.
பெரும் பெண் ரசிகைகள் கூட்டத்தை கொண்டுள்ள மாதவன் இப்பொழுது தனது சொந்த இயக்கத்தில் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் அதில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார்.
கோரண்டைனில் சில காலமாகவே நீண்ட முடியுடன் வலம் வந்த மாதவன் இப்பொழுது அதை வெட்டியதில் இரண்டு கிலோ வரை எடை குறைத்துள்ளதாக சிலாகித்து பதிவிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

கரடுமுரடான கதைகளில்
அலைபாயுதே முதல் இன்று வரை பெண்கள் மனதை கொள்ளை கொள்ளும் மன்மதனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாதவன் இப்பொழுது லவ்வர் பாய் இமேஜில் இருந்து சற்று விலகி வித்தியாசமான கரடுமுரடான கதைகளில் நடித்து வருகிறார்.

காதல் மன்னன்
காதல் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான மாதவன் அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், ஜே ஜே, பிரியமான தோழி என தொடர் காதல் திரைப்படங்களில் நடித்து காதல் மன்னனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

வசூலை அள்ளி தந்தது
இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அமீர்கானுடன் இணைந்து நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்த நிலையில், 3 இடியட்ஸ் திரைப்படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி இங்கும் மாஸ் வெற்றி பெற்று பல கோடி வசூலை அள்ளி தந்தது.

ஹிந்தியிலும் ரீமேக்
காதல் திரைப்படங்களில் நடித்து வந்த மாதவன் சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட முடியுடன் வித்தியாசமான லுக்கில் இறுதிச்சுற்று படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா திரைப்படமும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வெற்றி பெற்று இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக்காக உள்ளது.

நிசப்தம்
ஹீரோ கதாபாத்திரங்களில் இதுவரை மிரட்டி வந்த மாதவன் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் வில்லன் கலந்த ஹீரோவாக நடிப்பில் மிரட்டி இருந்த நிலையில் இனி வரும் திரைப்படங்களில் இவரை வில்லன் கதாபாத்திரங்களில் பார்க்க முடியும் என எதிர்பார்க்க வைத்துள்ளது.

இரண்டு கிலோ
கோரண்டைனில் சில மாதங்களாகவே நீண்ட முடியுடன் வலம் வந்த மாதவன் இப்பொழுது அதை வெட்டியதில் இரண்டு கிலோ எடை குறைந்துள்ளதாக கூறி வழக்கமான தனது ரொமான்டிக் சிரிப்புடன் கலகலப்பாக பகிர்ந்துள்ள இந்தப் பதிவு பலரையும் ரசிக்க வைத்திருக்கும் நிலையில் இவரின் தீவிர ரசிகைகள் நீங்கள் எப்படி இருந்தாலும் அழகா தான் இருக்கீங்க என மாதவனை இன்றும் உருகி உருகி காதலித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











