இந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைபட்டேன்.. உண்மையை உடைத்த மாதவன்!
சென்னை: இந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகர் மாதவன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார்.
இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவன் இயக்குநர் மணிரத்னம் அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே தமிழ் பெண்களின் மனதில் இடம் பிடித்த மாதவனை பெண் ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள்.
சாக்லேட் பாய் மாதவன்: இதையடுத்து 90ஸ் கிட்டுகளின் பேவரைட் படமான மின்னலே படத்தில், மேடி மேடியாக வந்து பெண்களின் சாக்லேட் பாயாக மாறினார். இப்படி ஒரு ஆணை திருமணம் செய்ய வேண்டுமான கனவு கண்டு மாப்பிளை தேடிய 90ஸ் பெண்களும் உண்டு. தற்போது சீனியர் நடிகர் என பெயர் எடுத்துள்ள மாதவன், ராக்கெட்ரி படத்தை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். மாதவன் அடுத்ததாக ஜிடி நாயுடுவின் பயோபிக் படத்தில் ஜிடி நாயுடுவாகவே நடித்து வருகிறார்.
தி ரயில்வே மேன்: தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவன், தி ரயில்வே மேன் என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். போபால் விஷவாயு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதில் மாதவனுடன் கே.கே. மேனன், சன்னி இந்துஜா, ஜுஹி சாவ்லா உட்பட பலர் நடித்துள்ளனர்.
திருமண ஆசை: ஷிவ் ராவைல் இயக்கியுள்ள இந்தத் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மாதவன், ஜுஹி சாவ்லாவின் தீவிர ரசிகன் நான். உங்களுடன் இந்த படத்தில் நடித்தது நான் செய்த அதிர்ஷ்டம். உங்கள் முன் ஒர் உண்மையை சொல்ல வேண்டும். ஆமிர்கானுடன் ஜுஹி சாவ்லா நடித்த கயாமத் சே கயாமத் தக் படத்தைப் பார்த்துவிட்டு என் அம்மாவிடம் ஜுஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினேன், அப்போது எனக்கு இருந்த ஒரே லட்சியம் அதுதான் என்று தனது நீண்ட நாள் ஆசை குறித்து மனம் திறந்து பேசினார் மாதவன்.
காதல் இளவரசன்: மாதவன் அலைபாயுதே படத்தில் அறிமுகமான மாதவன், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே சரிதா பிர்ஜே என்பவரை திருமணம் செய்துக் கொண்டு தான் சினிமாவில் காதல் இளவரசனாக டாப் ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











