»   »  மாதவனுடன் நீத்து!

மாதவனுடன் நீத்து!

Subscribe to Oneindia Tamil
Neetu Chacbndra witha Madhavan
எவனோ ஒருவன், வாழ்த்துகள் என அடுத்தடுத்து இரு படங்கள் வசூல் ரீதியாக சரியாக போகாததால், தான் அடுத்து நடித்துள்ள யாவரும் நலம் படத்தை அதிகம் நம்பியுள்ளார் மாதவன்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில், உருவாகி வரும் படம் யாவரும் நலம். விக்ரம் கே.குமார் இயக்கியுள்ளார். தெலுங்கிய்ல இஷ்டம், சிம்புவை வைத்து தமிழில் அலை ஆகிய இரு படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.

இந்தியில் இப்படத்திற்கு சப் கயிரியாத் என்று பெயரிட்டுள்ளனர். இதில் மாதவனுக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடித்துள்ளார்.

தமிழ் பதிப்பில் மலையாள நடிகர் சித்திக்கும், நடிகை சரண்யாவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆட்லேப்ஸ் தயாரித்துள்ள படம்தான் யாவரும் நலம். சங்கர் ஈசான் லாய் இசையமைத்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் கேமராவைக் கையாண்டுள்ளார்.

இப்படம் குறித்து மாதவன் கூறுகையில், விக்ரம் மீதும், அவரது கதை மீதும், எனது நடிப்பின் மீதும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். இப்படத்தை எனது மார்க்கெட் எழுச்சிக்கான படிக்கட்டாக கருதுகிறேன் என்றார் நம்பிக்கையுடன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil