twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இஸ்ரோ விஞ்ஞானியாக மாறும் மாதவன்: வைரலாகும் புதிய வீடியோ

    |

    Recommended Video

    இஸ்ரோ விஞ்ஞானியாக மாதவன்: வைரலாகும் வீடியோ

    சென்னை: அடுத்த படம் தொடர்பாக புதுமையான வீடியோவை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

    மாதவன் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரியின் இயக்கத்தில் மாஸ் ஹிட் அடித்தது. அதன்பிறகு ஒரு இடைவெளி எடுத்துக்கொண்ட மாதவன் தற்போது அடுத்த பட வேலையை ஆரம்பிக்க உள்ளார்.

    Madhavan interesting video about next movie

    இது மாதவனின் திரைவாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என சொல்லலாம். காரணம் என்னவென்றால் ராக்கெட் தொழில்நுட்பத்தில் அப்துல் கலாமோடு பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதையில் மாதவன் நடிக்கிறார். ஆனந்த் மகாதேவன் இயக்கும் இப்படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராக உள்ளது.

    இன்றைய ராக்கெட் ஏவுதலில் பயன்படுத்தப்படும் கிரையோஜனிக் தொழில்நுட்பத் துறையின் தலைவராக இஸ்ரோவில் பணியாற்றியவர் நம்பி நாரயணன் ஆவார். ராக்கெட்ரி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் நம்பி நாரயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக இஸ்ரோ சென்று பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் குறித்து புதுமையான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மாதவன். அந்த வீடியோவில், மிகப்பெரிய சாதனையாளர் நம்பி நாராயணன் பற்றிய படம் ராக்கெட்ரி எனக் கூறுகிறார். அப்படத்தின் டீசர் அக்டோபர் 31 ஆம் தேதி காலை 11.33 க்கு வெளியாகும் என தெரிவிக்கிறார்.

    மாதவனின் இந்த புதிய படத்திற்கு நடிகர் சூர்யா, இயக்குனர் புஷ்கர் காயத்ரி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actor Madhavan has shared an interesting video about his upcoming movie Rocketry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X