சீமான் அப்படியே வாழ்ந்தாருங்க.. கமல் சாரை கன்னத்திலேயே அறைஞ்சிட்டேன்.. மாதவன் பளிச் பேட்டி!
சென்னை: நயன்தாராவுடன் இணைந்து மாதவன் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. சமீபத்தில், குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களை பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் விதமாக Parent Geenee எனும் செயலை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அலைப்பாயுதே, தம்பி மற்றும் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.
அலைபாயுதே படத்தில் பைக் ஓட்டிக் கொண்டு "என்றென்றும் புன்னகை" பாடல் ஒலிக்க மாதவன் வரும் காட்சியின் போது வாக்மேனில் என்ன பாடல் கேட்டீங்க என்கிற கேள்விக்கு ஹெட் செட்டுடன் வாக்மேனே கனெக்ட் ஆகியிருக்கவில்லை. சும்மா நானே தலையாட்டிக் கொண்டு பைக் ஓட்டிக் கொண்டு வந்தேன் என்றார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறோம், "நீ அழகா இருக்கன்னு நினைக்கல" என்கிற வசனம் 25 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களுக்கு பிடித்த எபிக் டயலாக்காக மாறும் என்றெல்லாம் அப்போது நினைக்கவில்லை. வசனம் பேசிவிட்டு ரயிலில் இருந்து சரியாக இறங்கி, அந்த டிராக்கில் ஓட வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.
சீமான் அப்படியே வாழ்ந்தாரு: மின்னலே படத்தில் "மேடி.. மேடி" என்கிற தீம் மியூசிக் போடும் போது ஹாரிஷ் ஜெயராஜுக்கு என்னுடைய பெயரே தெரியாது. எதுக்கு இப்படி போட்டீங்கன்னு கேட்டேன், சும்மா நல்லா இருந்தது என்றார். தம்பி படத்தில் நடிக்கும் போது, சீமான் எப்படியெல்லாம் கையசைத்து பேசுவாரோ, கத்தி பேசுவாரோ அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு தான் நடித்தேன். எனக்கு முன்பாக தம்பியாக சீமான் வாழ்ந்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை தான் எனக்குள் அவர் கடத்தினார். ஒரு சில படங்களை பண்ணும் போது, அந்த படத்தை இயக்குநர்கள் ஏன் பண்ணுகிறார்கள் என்பதை யோசிப்பேன். அதில், ஒரு அர்த்தம் இருந்தால் அதில், என்னையே நான் அர்ப்பணித்துவிடுவேன் என்றார்.
கமல் சாரை அறைஞ்சிட்டேன்: சுந்தர். சி இயக்கத்தில் கமல் சாருடன் அன்பே சிவம் படம் முழுக்க நடிப்பேன் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவருடன் ஒரு ஃபிரேமில் வந்தால் கூட போதும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஷூட்டிங்கின் போது ஒரு சீனில் அவரை அடிக்க வேண்டும். ஆனால், நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனால், அவர் என்னை உசுப்பி விட்டு அடிக்க வைத்தார். நிஜமாவே அவரை நான் அறைஞ்சிட்டேன். அந்த ஷாட் முடிந்ததும் ஸாரி ஸாரி சார் என்றேன். ஷாட் எப்படி வந்திருக்கு போய் பாருன்னு சொல்லிட்டுப் போய்ட்டார் என மாதவன் தனது மறக்க முடியாத திரை அனுபவங்களை சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கலாம். அடுத்ததாக ஜி.டி. நாயுடுவின் பயோபிக்கிலும் மாதவன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











