குத்துச்சண்டை வீரர் முகமது அலி வாழ்க்கை கதையில் மாதவன்
முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமதி அலியின் வாழ்க்கை கதையில் நடிக்கிறார் மாதவன். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளர் இயக்குகிறார்.
இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. ‘லால்' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை கதையில் ஒரு பகுதி இந்த படத்தில் இடம் பெறுகிறது.
இதில் நடிப்பதற்காக மாதவன் 15 கிலோ உடல் எடை குறைத்துள்ளார். இதற்காக அமெரிக்காவுக்கே சென்ற மாதவன், அங்கு தங்கி பல்வேறு பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
இது குறித்து மாதவன் கூறுகையில், "எனது கேரக்டருக்கு பொருத்தமாக லாஸ் ஏஞ்சல்சில் பயிற்சிகள் மேற்கொண்டு உடல் அமைப்பை மாற்றி இருக்கிறேன். உடல்மொழியும் மாறி இருக்கிறது. இப்போது என் நடவடிக்கைகள் மற்றும் சிந்தனைகள் எல்லாமே ஒரு குத்துச் சண்டை வீரர் போலவே உள்ளன," என்றார்.
இந்த படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா இயக்குகிறார்.
குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்ஸ் வாழ்க்கை கதையில் சமீபத்தில் ப்ரியங்கா சோப்ரா நடித்த படம் பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











