சிரஞ்சீவி படத்தில் வில்லனாக நடிக்கும் மாதவன்?

சென்னை : மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிரித்விராஜ் இயக்குனராக லூசிஃபர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகச் சிறந்த இயக்குனர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றார் .

மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசை தெறிக்க விட்டது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் இப்பொழுது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

லூசிஃபர் தெலுங்கு ரீமேக் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அரசியல் த்ரில்லர்

அரசியல் த்ரில்லர்

மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு லாபங்களை அள்ளும் மலையாள சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் த்ரில்லர் கதை களத்தில் வெளியான இந்த திரைப்படம் அந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக ஆனது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய லூசிஃபர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற மலையாள சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக பிரித்விராஜ் பெயர் எடுத்துள்ளார். மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் இந்திரஜித்,ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வாரிசு அரசியலை மையப்படுத்திய த்ரில்லர் படமாக வெளியானது.

தனி ஒருவன்

தனி ஒருவன்

மலையாள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தொடர்ந்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து ரீமேக் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் மோகன் ராஜா அந்த பெயரை உடைக்கும் வகையில் தனி ஒருவன், வேலைக்காரன் என்ற இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தார். அடுத்ததாக மோகன்ராஜா விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டது. அதுபற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத சூழலில் இப்பொழுது லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.

காட்ஃபாதர்

காட்ஃபாதர்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகிவரும் தெலுங்கு லூசிஃபர் படத்திற்கு "காட்ஃபாதர்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காட்ஃபாதர் டைட்டில் போஸ்டர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. சிரஞ்சீவி, மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் காட்ஃபாதர் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து அசத்தி கொண்டிருக்கும் நயன்தாரா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் விவேக் ஓபராய் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் நடிக்க உள்ளார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்துவர இப்பொழுது முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

முரட்டுத்தனமான ரோலில்

முரட்டுத்தனமான ரோலில்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஸ்வீட்டான லவ்வர் பாயாக அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் பெண்களின் கனவுக் கண்ணனாக முதல் படத்திலேயே மாறிய மாதவன் இன்றுவரை அதே ரசிகைகள் கூட்டத்தை கொண்டுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாதவன் பல ஆண்டுகளாக லவ்வர் பாயாக வலம் வர சமீபகாலமாக முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வேறு விதமான மாதவனை ரசிகர்களை கண்டு களிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்சராக நடித்து நடிப்பில் மிரட்டி இருந்ததை அனைவரும் வாய் பிளந்து பார்க்க அதைத் தொடர்ந்து வெளியான விக்ரம் வேதா படத்திலும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார். இந்த நிலையில் சென்ற ஆண்டு வெளியான நிசப்தம் திரைப்படத்தில் நடிகர் மாதவன் வில்லன் கலந்த ஹீரோவாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

வில்லனாக மாதவன்

வில்லனாக மாதவன்

இப்போதெல்லாம் ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது பேஷனாகிப் போக ரசிகர்களும் அதையே விரும்புகின்றனர். எனவே முன்னணி நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் சவாலான வில்லன் கதாபாத்திரங்கள் வந்தாலும் ஏற்று நடிக்க தயாராக உள்ளனர். அந்த வகையில் நடிகர் மாதவன் இப்பொழுது வில்லனாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார். மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படம் இப்போது தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் உருவாக இதில் நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பிரமிக்க வைத்த நடிகை நயன்தாரா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இப்படத்தில் நடிகர் மாதவன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. லூசிஃபர் மலையாளத்தில் வில்லனாக நடிகர் விவேக் ஓபராய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் நடிக்க இருக்க வில்லனாக மாதவன் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X