மறக்காம வந்திருங்க...மாதவன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

சென்னை : 2000 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். தமிழில் மின்னலே, பார்த்தாலே பரவசம், நளதமயந்தி, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ள மாதவன், சமீப காலமாக வெப் சீரிஸ்கள் பலவற்றில் நடித்து வருகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட மாறா வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதி

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் மாதவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாலியாக தெரிவித்த மாதவன், விரைவில் அதிலிருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார்.

மறக்காம வந்திருங்க

தற்போது சிகிச்சையில் இருந்து வரும் மாதவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் வைத்திருக்கிறோம். மறக்காம வந்திருங்க.

 நீங்க தான சீஃப் கெஸ்ட்

நீங்க தான சீஃப் கெஸ்ட்

உங்க வீட்டு பக்கத்துல தான். வந்து, நல்லபடியாக ஓட்டு போட்டுட்டு போங்க. என்னடா ஒரு கல்யாணத்துக்கு அழைக்குற போல அழைக்கிறேனு பார்க்குறீங்களா. இது நம்ம நாட்டோட கல்யாணம் தானங்க. அதுல மிக முக்கியமான சீஃப் கெஸ்ட் நீங்க தான்.

100 சதவீதம் வந்திருங்க

100 சதவீதம் வந்திருங்க

அதனால மறக்காம வந்துருங்க. ஞாபகம் இருக்குல ஏப்ரல் 6 ம் தேதி, 100 சதவீதம் வந்திருங்க. இவ்வாறு அதில் மாதவன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. பலர் மறக்காம வந்திடுறோம் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X