வேட்பாளர்களே, ஒருவரையொருவர் தூற்றுவதை நிறுத்துங்கள்: நடிகர் மாதவன்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை பார்த்து போர் அடிப்பதாக நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வரும் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் மாதவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரித் தூத்துவதை பார்த்து போர் அடிக்கிறது. நிறுத்துங்கள். உங்களால் என்ன முடியும், முடியாது என்பதை எங்களிடம் கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் உங்களை வச்சு படம் ஏதும் எடுக்கலையா, மேடி?


Click it and Unblock the Notifications











