நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு… ‘ராக்கெட்ரி‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்ரி' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாள, கன்னடம் என 6 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் 'ராக்கெட்ரி. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இஸ்ரோ விஞ்ஞானி கதை

இஸ்ரோ விஞ்ஞானி கதை

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இதனை அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பற்றிய வேறு தகவல்களும் வெளிவராத நிலையில் இது, இஸ்ரோ விஞ்ஞானியின் கதை என்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்தாண்டு ரிலீஸ்

அடுத்தாண்டு ரிலீஸ்

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி என 6 மொழிகளில் வெளியாக உள்ளது.

கௌரவ வேடத்தில் சூர்யா

கௌரவ வேடத்தில் சூர்யா

இப்படத்தில் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கேரள அரசால் கைது

கேரள அரசால் கைது

கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X