வெளிநாடு சென்றாலே அந்தப் பெண்கள்.. மாதவன் ஓபன் டாக்.. சாக்லேட் பாய் சொன்ன சூப்பர் விஷயம்

சென்னை: பல பெண்களின் க்ரஷ்ஷாக இருப்பவர் மாதவன். வயது 50ஐ கடந்தாலும் இன்னமும் பழைய லுக்கோடும், ஃபிட்டோடும் இருக்கிறார். கரியரை பொறுத்தவரை ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி நடிக்கிறார். இந்நிலையில் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் வழக்கமுடைய மாதவன் வெளிநாட்டு பெண்களின் பார்வையில் இந்தியர்கள் எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி; முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தவர் மாதவன். ஸ்க்ரீனில் அவரை பார்த்தபோது அத்தனை பெண்களும் தங்களை அவரது ரசிகைகளாக மாற்றிக்கொண்டார்கள். தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக வலம் வந்து ஓய்ந்த சமயத்தில் மாதவனின் என்ட்ரி நடந்தது. அழகு மட்டுமின்றி திறமையும் அவரிடம் நிறையவே இருந்தது.

ரக்கட் பாயும்கூட: அதனால்தான் மென்மையான படங்கள் மட்டுமின்றி ஆக்‌ஷன் ஜானரிலும் அவரால் ஜொலிக்க முடிந்தது. ரன், தம்பி உள்ளிட்ட படங்களில் எல்லாம் வேறு மாதிரி நடித்து தன்னை நிரூபித்தவர்; அன்பே சிவம் படத்தில் வேறு ஒரு மாதவனை காட்சிப்படுத்தினார். இப்படி எக்கச்சக்க படங்களில் சிறப்பாக நடித்த அவர் இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். அவர் நடித்த விக்ரம் வேதா, இறுதிச்சுற்று ஆகிய படங்கள் பயங்கர மாஸாக அவருக்கு அமைந்தன.

Madhavan Says Foreign Women Now See Indian Men as Confident Professionals
Photo Credit:

இயக்குநர் மாதவன்: நடிகராக மட்டும் கலக்கிவந்த மாதவன் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை திரைப்படமாக சில வருடங்களுக்கு முன்பு எடுத்தார். அவரே நம்பி கேரக்டரையும் ஏற்றிருந்தார். அப்படியே அந்த கேரக்டராகவே அவர் மாறியிருந்தாலும் படம் எதிர்பார்த்தபடி பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் மாதவனின் நடிப்புக்கும், இயக்கத்துக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

தேசிய விருது: குறிப்பாக தேசிய விருதையும் பெற்றது. தற்போது அவர் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார். அதனை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்குகிறார். ராக்கெட்ரி திரைப்படம் எப்படி தேசிய அளவில் கவனம் ஈர்த்ததோ அதேபோன்ற ரிசல்ட்டை இந்தப் படத்திலும் பெற வேண்டும் என்ற தனது டீமுடன் பணிகளை ஆரம்பித்திருக்கிறார் மேடி. இந்தப் படத்தில் மாதவனுடன் ஜெயராம் உள்ளிட்ட சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டு பெண்கள் பார்வையில் இந்தியர்கள் எப்படி என்பது குறித்து பேசுகையில், "வெளிநாடுகளில் முன்பெல்லாம் பாருக்கு செல்லும்போது அங்கிருக்கும் பெண்கள் இந்தியர்களாகிய நாம் அவர்களிடம் வழிந்து பேச வந்தது போன்றுதான் பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஒரு இந்தியர் சென்றால் அவரை பார்த்து நான்கு பெண்கள் ஹலோ சொல்கிறார்கள். நம்மை அவர்கள் தொழில் முனைவோர் என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்றார்.

More from Filmibeat

Read more about: madhavan மாதவன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X