»   »  மீண்டும் மாதவன் பிஸி மாதவனுடன் நடிப்பது என்றாலே இப்போதெல்லாம் எந்த தமிழ் முன்னணி ஹீரோயினும் முன் வருவதில்லையாம்.அவர் வேணாம், இவர் வேணாம்.. அவர் முகத்துல சுருக்கம் இருக்கு.. இவருக்கு சரியா நடக்கத் தெரியலை என்று முதலில்மாதவன் தான் ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஏதாவது நொட்டு சொல்லி கழித்துக் கட்டி வந்தார். இப்போது காலம் அப்படியே ஒருமுழு சுற்று சுற்றி முடித்துவிட்டது.மாதவனுக்கு ஜோடியாக நடிக்கச் சொன்னால் நடிகைகள் ஓடுகிறார்கள். சதாவுடன் நடித்த ப்ரியசகி படத்தின் பெரும்தோல்விக்குப் பின் தமிழில் படங்களே இல்லாமல் இருந்தார் மாதவன். இதனால் சோனி டிவியில் கேம் ஷோ நடத்தப்போய்விட்டார். இந் நிலையில் அவருக்கு ஆர்யா உள்பட இரண்டு படங்கள் புக் ஆகியுள்ளன. மாதவனுக்கு படங்கள் கூட கிடைத்துவிடும் போலிருக்கிறது, ஆனால், ஹீரோயின் கிடைப்பது தான் மகா சிக்கலாக இருக்கிறது.அவருக்கு சினிமா செவ்வாய் தோஷமோ என்னவோ.ஆர்யா படத்தில் கோபிகாவைப் போடுங்கள் என்று வழக்கம்போல் மாதவன் போல்டாக சொல்ல, ஆனால், கோபிகா பெரிய நோசொல்லிவிட்டாராம்.சிம்பு, பரத் கூட எல்லாம் நடிக்கத் தயாராக இருக்கும் கோபிகா மாதவனுக்கு நோ சொன்னதால், தமிழில் வேறு சில முன்னணிஹீரோயின்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், யாருமே ஜோடி போட மறுத்துவிட்டார்களாம். இதையடுத்து சதாவையே கேட்போமோ என்றார்களாம். அய்யய்யோ ப்ரியசகியில் நடித்தபோதே இரண்டு பேருக்கும் காதல்என்று கதை கட்டிவிட்டார்கள். சதா வேணவே வேணாம் என்று கூறிவிட்டாராம் மேடி.இதனால் சித்திரம் பேசுதடி படத்தில் நடிக்கும் பாவனாவை புக் செய்துள்ளார்கள். படத்தில் மாதவனுக்கு டாக்டர் வேடாம்.இதற்கிடையே சினிமாட்டோகிராபரும் இயக்குனருமான ஜீவா ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதில் நடிக்க மாதவனைக்கூப்பிட்டால் ரூ. 1 கோடி கொடுங்கோ என்கிறாராம். இதனால் யோசனையில் இருக்கிறார் ஜீவா. அதே போல பாபா ஊத்து புகழ் சுரேஷ்கிருஷ்ணாவும், பிப்ரவரி 14 படத்தை இயக்கிய ஹோசிமினும் மாதவனை வைத்து படம்பண்ணும் திட்டத்தில் இருக்கிறார்களாம். இதனால் விரைவில் தமிழில் மீண்டும் பிஸியாகிவிடுவார் மாதவன் என்று நம்புவோம்.மீண்டும் சினிமா வாய்ப்புக்கள் வந்துவிட்ட நிலையில் சோனி டிவியில் கேம் ஷோவுக்கு மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே செலவிடஉள்ளாராம் மாதவன். ஆனால், அதற்காக அவருக்குக் கிடைக்கும் சம்பளம் ரொம்பப் பெரிசு என்கிறார்கள்.இதற்கிடையே ஆர்யாவில் நடிக்கும் பாவனா வெயில், கூடல் நகர் என அடுத்தடுத்து படங்களில் தமிழ்ப் படங்களில்பிஸியாகிவிட்டார்.

மீண்டும் மாதவன் பிஸி மாதவனுடன் நடிப்பது என்றாலே இப்போதெல்லாம் எந்த தமிழ் முன்னணி ஹீரோயினும் முன் வருவதில்லையாம்.அவர் வேணாம், இவர் வேணாம்.. அவர் முகத்துல சுருக்கம் இருக்கு.. இவருக்கு சரியா நடக்கத் தெரியலை என்று முதலில்மாதவன் தான் ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஏதாவது நொட்டு சொல்லி கழித்துக் கட்டி வந்தார். இப்போது காலம் அப்படியே ஒருமுழு சுற்று சுற்றி முடித்துவிட்டது.மாதவனுக்கு ஜோடியாக நடிக்கச் சொன்னால் நடிகைகள் ஓடுகிறார்கள். சதாவுடன் நடித்த ப்ரியசகி படத்தின் பெரும்தோல்விக்குப் பின் தமிழில் படங்களே இல்லாமல் இருந்தார் மாதவன். இதனால் சோனி டிவியில் கேம் ஷோ நடத்தப்போய்விட்டார். இந் நிலையில் அவருக்கு ஆர்யா உள்பட இரண்டு படங்கள் புக் ஆகியுள்ளன. மாதவனுக்கு படங்கள் கூட கிடைத்துவிடும் போலிருக்கிறது, ஆனால், ஹீரோயின் கிடைப்பது தான் மகா சிக்கலாக இருக்கிறது.அவருக்கு சினிமா செவ்வாய் தோஷமோ என்னவோ.ஆர்யா படத்தில் கோபிகாவைப் போடுங்கள் என்று வழக்கம்போல் மாதவன் போல்டாக சொல்ல, ஆனால், கோபிகா பெரிய நோசொல்லிவிட்டாராம்.சிம்பு, பரத் கூட எல்லாம் நடிக்கத் தயாராக இருக்கும் கோபிகா மாதவனுக்கு நோ சொன்னதால், தமிழில் வேறு சில முன்னணிஹீரோயின்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், யாருமே ஜோடி போட மறுத்துவிட்டார்களாம். இதையடுத்து சதாவையே கேட்போமோ என்றார்களாம். அய்யய்யோ ப்ரியசகியில் நடித்தபோதே இரண்டு பேருக்கும் காதல்என்று கதை கட்டிவிட்டார்கள். சதா வேணவே வேணாம் என்று கூறிவிட்டாராம் மேடி.இதனால் சித்திரம் பேசுதடி படத்தில் நடிக்கும் பாவனாவை புக் செய்துள்ளார்கள். படத்தில் மாதவனுக்கு டாக்டர் வேடாம்.இதற்கிடையே சினிமாட்டோகிராபரும் இயக்குனருமான ஜீவா ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதில் நடிக்க மாதவனைக்கூப்பிட்டால் ரூ. 1 கோடி கொடுங்கோ என்கிறாராம். இதனால் யோசனையில் இருக்கிறார் ஜீவா. அதே போல பாபா ஊத்து புகழ் சுரேஷ்கிருஷ்ணாவும், பிப்ரவரி 14 படத்தை இயக்கிய ஹோசிமினும் மாதவனை வைத்து படம்பண்ணும் திட்டத்தில் இருக்கிறார்களாம். இதனால் விரைவில் தமிழில் மீண்டும் பிஸியாகிவிடுவார் மாதவன் என்று நம்புவோம்.மீண்டும் சினிமா வாய்ப்புக்கள் வந்துவிட்ட நிலையில் சோனி டிவியில் கேம் ஷோவுக்கு மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே செலவிடஉள்ளாராம் மாதவன். ஆனால், அதற்காக அவருக்குக் கிடைக்கும் சம்பளம் ரொம்பப் பெரிசு என்கிறார்கள்.இதற்கிடையே ஆர்யாவில் நடிக்கும் பாவனா வெயில், கூடல் நகர் என அடுத்தடுத்து படங்களில் தமிழ்ப் படங்களில்பிஸியாகிவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

மாதவனுடன் நடிப்பது என்றாலே இப்போதெல்லாம் எந்த தமிழ் முன்னணி ஹீரோயினும் முன் வருவதில்லையாம்.

அவர் வேணாம், இவர் வேணாம்.. அவர் முகத்துல சுருக்கம் இருக்கு.. இவருக்கு சரியா நடக்கத் தெரியலை என்று முதலில்மாதவன் தான் ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஏதாவது நொட்டு சொல்லி கழித்துக் கட்டி வந்தார். இப்போது காலம் அப்படியே ஒருமுழு சுற்று சுற்றி முடித்துவிட்டது.

மாதவனுக்கு ஜோடியாக நடிக்கச் சொன்னால் நடிகைகள் ஓடுகிறார்கள். சதாவுடன் நடித்த ப்ரியசகி படத்தின் பெரும்தோல்விக்குப் பின் தமிழில் படங்களே இல்லாமல் இருந்தார் மாதவன். இதனால் சோனி டிவியில் கேம் ஷோ நடத்தப்போய்விட்டார். இந் நிலையில் அவருக்கு ஆர்யா உள்பட இரண்டு படங்கள் புக் ஆகியுள்ளன.


மாதவனுக்கு படங்கள் கூட கிடைத்துவிடும் போலிருக்கிறது, ஆனால், ஹீரோயின் கிடைப்பது தான் மகா சிக்கலாக இருக்கிறது.அவருக்கு சினிமா செவ்வாய் தோஷமோ என்னவோ.

ஆர்யா படத்தில் கோபிகாவைப் போடுங்கள் என்று வழக்கம்போல் மாதவன் போல்டாக சொல்ல, ஆனால், கோபிகா பெரிய நோசொல்லிவிட்டாராம்.

சிம்பு, பரத் கூட எல்லாம் நடிக்கத் தயாராக இருக்கும் கோபிகா மாதவனுக்கு நோ சொன்னதால், தமிழில் வேறு சில முன்னணிஹீரோயின்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், யாருமே ஜோடி போட மறுத்துவிட்டார்களாம்.


இதையடுத்து சதாவையே கேட்போமோ என்றார்களாம். அய்யய்யோ ப்ரியசகியில் நடித்தபோதே இரண்டு பேருக்கும் காதல்என்று கதை கட்டிவிட்டார்கள். சதா வேணவே வேணாம் என்று கூறிவிட்டாராம் மேடி.

இதனால் சித்திரம் பேசுதடி படத்தில் நடிக்கும் பாவனாவை புக் செய்துள்ளார்கள். படத்தில் மாதவனுக்கு டாக்டர் வேடாம்.

இதற்கிடையே சினிமாட்டோகிராபரும் இயக்குனருமான ஜீவா ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதில் நடிக்க மாதவனைக்கூப்பிட்டால் ரூ. 1 கோடி கொடுங்கோ என்கிறாராம். இதனால் யோசனையில் இருக்கிறார் ஜீவா.


அதே போல பாபா ஊத்து புகழ் சுரேஷ்கிருஷ்ணாவும், பிப்ரவரி 14 படத்தை இயக்கிய ஹோசிமினும் மாதவனை வைத்து படம்பண்ணும் திட்டத்தில் இருக்கிறார்களாம். இதனால் விரைவில் தமிழில் மீண்டும் பிஸியாகிவிடுவார் மாதவன் என்று நம்புவோம்.

மீண்டும் சினிமா வாய்ப்புக்கள் வந்துவிட்ட நிலையில் சோனி டிவியில் கேம் ஷோவுக்கு மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே செலவிடஉள்ளாராம் மாதவன். ஆனால், அதற்காக அவருக்குக் கிடைக்கும் சம்பளம் ரொம்பப் பெரிசு என்கிறார்கள்.

இதற்கிடையே ஆர்யாவில் நடிக்கும் பாவனா வெயில், கூடல் நகர் என அடுத்தடுத்து படங்களில் தமிழ்ப் படங்களில்பிஸியாகிவிட்டார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil