சம்பளத்தை குறைத்த மாதவன் மாதவன் தனது மார்க்கெட் சரிவு குறித்து இப்போது தான் உண்மையிலேயே கவலைப்பட ஆரம்பித்துள்ளார்.தனது மார்க்கெட் சுத்தாக முடிவுக்கு வந்துவிடும் முன் உஷாராகிவிட வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்ட மேடி, தனதுசம்பளத்தை ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 70 லட்சமாகக் குறைத்துவிட்டார். இதையடுத்து அவருக்கு சில ஆபர்கள் வரஆரம்பித்துள்ளன.இப்போது ஆர்யா என்ற படத்தில் நடித்து வரும் மாதவனை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டார் பாலுமகேந்திரா. அது ஒருகனாக் காலம் ஊத்தியதால் தனுசுக்கும் பாலுவுக்கும் பெரும் சரிவு உண்டாகியுள்ளது. இந் நிலையில் தான் தன்னே நிலை நிறுத்தமாதவனைத் தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டுள்ளார்.ஆனால், அதில் நடிக்கத் தயாராக இல்லை என்று தீர்மானமாக சொல்லி விட்டாராம். எனவே வேறு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார் பாலு மகேந்திரா.இதற்கிடையே மாதவனை வைத்து படம் எடுக்க சுரேஷ் கிருஷ்ணாவும் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக மாதவனுடன்பேச்சு நடத்தி வருகிறாராம். அதே போல பிப்ரவரி 14 படத்தை இயக்கிய ஹோசிமின், அடுத்ததாக வால்டாக்ஸ் ரோடு என்றஆக்ஷன் படத்தை எடுக்கவுள்ளார். இதில் நாயகனாக ஆர்யா அல்லது மாதவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சம்பளத்தை லேசாககுறைத்த நிலையிலேயே மாதவனுக்கு இத்தனை ஆபர்கள் வந்துவிட்டன. அதை மேலும் குறைந்தால் மேலும் அதிகப் படங்கள்கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், மாதவன் அதற்குத் தயார் இல்லையாம்.சமீபத்தில் எந்த படமும் உங்களுக்கு கை கொடுக்கலையே என்று மாதவனிடம் கேட்டால்,விரைவில் வெளிவரப் போகும் தம்பி படம் எனக்கு நிச்சயம் ஒரு திருப்பத்தை தரும். அவ்வளவு நல்ல கதாபாத்திரம் அது.இதுவரை இப்படியோரு கேரக்டரை நான் எந்த சினிமாவிலும் பார்த்தது கிடையாது. டைரக்டர் சீமான் இந்த கேரக்டரை சொல்லும்போது மிகவும் ஒன்றி விட்டேன்.இந்த படத்தில் நான் ஒரு போராளியாக நடிக்கிறேன். வன்முறை இருக்க கூடாது என்று நினைக்கிற சேலஞ்சிங்கான கேரக்டர்.சினிமாவைப் பொறுத்த வரையில் கதை தான் ரொம்ப முக்கியம். ஆக்ஷனா, ஃபேமிலியா, லவ்வாங்கிறது இல்ல. ஸ்கிரிப்ட்நல்லாயிருந்தா எந்த மாதிரி படமும் ஜெயிக்கும்.ஆர்யா படத்தில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டா நடிக்கிறேன். இது ஆக்ஷன் கலந்த காதல் கதை. நான் எப்போதும் அதிகப்படியான படங்களை ஒத்துக் கொள்வதில்லை. ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கிறேன்.இப்போதைக்கு தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். புதிதாக கதை சொல்லி வருபவர்களைவரவேற்க நான் தயாராக இருக்கிறேன். நான் இன்னும் பட்டை தீட்டப்படணும். அப்போதுதான் விக்ரம் சார் பண்ற மாதிரியான கேரக்டர்களில் நடிக்க முடியும். இன்னும்நான் நிறைய சாதிக்கணும்னு ஆசையிருக்கு என்னும் மாதவன் மகன் பிறந்த மகிழ்ச்சியில் உள்ளார்.3 வருட தவத்திற்கு பிறகு பிறந்த தனது தவப் புதல்வனுக்கு வேதாந்த் என பெயர் வைத்துள்ளார்.இப்போது தனியார் டிவியில் கேம் ஷோ நடத்தும் மாதவன் பெரும்பாலான நாட்கள் சென்னையிலும், வெளியூர்களிலும்இருப்பதால் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டை பூட்டியே வைத்துள்ளாராம். ஆனால் மாதந்தோறும் இந்த வீட்டைபராமரிக்க ஆட்களை வைத்துள்ளாராம். அதற்கு பராபரிப்பு செலவு மட்டும் ரூ. 25,000 ஆகிறதாம்.அவர்கிட்ட இருக்கு, செலவு பண்றார்.. நமக்கென்ன..

By Staff

மாதவன் தனது மார்க்கெட் சரிவு குறித்து இப்போது தான் உண்மையிலேயே கவலைப்பட ஆரம்பித்துள்ளார்.

தனது மார்க்கெட் சுத்தாக முடிவுக்கு வந்துவிடும் முன் உஷாராகிவிட வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்ட மேடி, தனதுசம்பளத்தை ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 70 லட்சமாகக் குறைத்துவிட்டார். இதையடுத்து அவருக்கு சில ஆபர்கள் வரஆரம்பித்துள்ளன.

இப்போது ஆர்யா என்ற படத்தில் நடித்து வரும் மாதவனை வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டார் பாலுமகேந்திரா. அது ஒருகனாக் காலம் ஊத்தியதால் தனுசுக்கும் பாலுவுக்கும் பெரும் சரிவு உண்டாகியுள்ளது. இந் நிலையில் தான் தன்னே நிலை நிறுத்தமாதவனைத் தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டுள்ளார்.

ஆனால், அதில் நடிக்கத் தயாராக இல்லை என்று தீர்மானமாக சொல்லி விட்டாராம். எனவே வேறு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார் பாலு மகேந்திரா.

இதற்கிடையே மாதவனை வைத்து படம் எடுக்க சுரேஷ் கிருஷ்ணாவும் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக மாதவனுடன்பேச்சு நடத்தி வருகிறாராம். அதே போல பிப்ரவரி 14 படத்தை இயக்கிய ஹோசிமின், அடுத்ததாக வால்டாக்ஸ் ரோடு என்றஆக்ஷன் படத்தை எடுக்கவுள்ளார்.


இதில் நாயகனாக ஆர்யா அல்லது மாதவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சம்பளத்தை லேசாககுறைத்த நிலையிலேயே மாதவனுக்கு இத்தனை ஆபர்கள் வந்துவிட்டன. அதை மேலும் குறைந்தால் மேலும் அதிகப் படங்கள்கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், மாதவன் அதற்குத் தயார் இல்லையாம்.

சமீபத்தில் எந்த படமும் உங்களுக்கு கை கொடுக்கலையே என்று மாதவனிடம் கேட்டால்,

விரைவில் வெளிவரப் போகும் தம்பி படம் எனக்கு நிச்சயம் ஒரு திருப்பத்தை தரும். அவ்வளவு நல்ல கதாபாத்திரம் அது.இதுவரை இப்படியோரு கேரக்டரை நான் எந்த சினிமாவிலும் பார்த்தது கிடையாது. டைரக்டர் சீமான் இந்த கேரக்டரை சொல்லும்போது மிகவும் ஒன்றி விட்டேன்.

இந்த படத்தில் நான் ஒரு போராளியாக நடிக்கிறேன். வன்முறை இருக்க கூடாது என்று நினைக்கிற சேலஞ்சிங்கான கேரக்டர்.சினிமாவைப் பொறுத்த வரையில் கதை தான் ரொம்ப முக்கியம். ஆக்ஷனா, ஃபேமிலியா, லவ்வாங்கிறது இல்ல. ஸ்கிரிப்ட்நல்லாயிருந்தா எந்த மாதிரி படமும் ஜெயிக்கும்.

ஆர்யா படத்தில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டா நடிக்கிறேன். இது ஆக்ஷன் கலந்த காதல் கதை.


நான் எப்போதும் அதிகப்படியான படங்களை ஒத்துக் கொள்வதில்லை. ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கிறேன்.இப்போதைக்கு தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். புதிதாக கதை சொல்லி வருபவர்களைவரவேற்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் இன்னும் பட்டை தீட்டப்படணும். அப்போதுதான் விக்ரம் சார் பண்ற மாதிரியான கேரக்டர்களில் நடிக்க முடியும். இன்னும்நான் நிறைய சாதிக்கணும்னு ஆசையிருக்கு என்னும் மாதவன் மகன் பிறந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

3 வருட தவத்திற்கு பிறகு பிறந்த தனது தவப் புதல்வனுக்கு வேதாந்த் என பெயர் வைத்துள்ளார்.

இப்போது தனியார் டிவியில் கேம் ஷோ நடத்தும் மாதவன் பெரும்பாலான நாட்கள் சென்னையிலும், வெளியூர்களிலும்இருப்பதால் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது வீட்டை பூட்டியே வைத்துள்ளாராம். ஆனால் மாதந்தோறும் இந்த வீட்டைபராமரிக்க ஆட்களை வைத்துள்ளாராம். அதற்கு பராபரிப்பு செலவு மட்டும் ரூ. 25,000 ஆகிறதாம்.

அவர்கிட்ட இருக்கு, செலவு பண்றார்.. நமக்கென்ன..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X