»   »  விக்ரமை விரட்டும் பெண் இயக்குனர்!

விக்ரமை விரட்டும் பெண் இயக்குனர்!

Subscribe to Oneindia Tamil

விக்ரம், ஜெயம் ரவியின் கால்ஷீட்டுக்காக மதுமிதா என்ற இளம் பெண் இயக்குநர் விடாப்பிடியாக துரத்திவருகிறார்.

தமிழ் சினிமாவில் ஆம்பளைஸ் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவ்வப்போது அத்தி பூத்தாற் போல சில பெண்இயக்குநர்கள் வந்து போவார்கள். மணிரத்தினத்தின் உதவியாளரான பிரியா சில நல்ல படங்களைஇயக்கியுள்ளார். ஆனாலும் அவரால் இன்னும் பெரிய லெவலுக்கு உயர முடியாமல் உள்ளார்.

இப்போது புதிதாக மதுமிதா என்ற புத்திளம் பெண் இயக்குநர் ஒருவர் கோலிவுட்டுக்குள் கால் எடுத்துவைத்துள்ளார். பார்க்க படு பளிச்சென இருக்கும் மதுமிதா மட்டும் நடிக்க ஆரம்பித்தால் இப்போதுள்ளஹீரோயின்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார். அப்படி ஒரு அசத்தல் லுக்கில் இருக்கிறார்.

அம்சமாக இருக்கும் மதுமிதாவின் கனவு இயக்குநராவதுதானாம். அருமையான கதை ஒன்றை வைத்துள்ளாராம்.அக்கதையை படமாக்க தயாரிப்பாளர் ஒருவரும் கிடைத்துவிட்டார். ஆனால் எனது கதைக்குப் பொருத்தமானவர்விக்ரம்தான். அவரை விட்டால் ஜெயம் ரவிதான் சரியாக இருப்பார் என கூறுகிறார் மது.

இந்த இருவ>ல் ஒருவரை பிடித்துப் போட கடுமையாக முயன்று வருகிறாராம் மதுமிதா.

விக்ரம் கிடைக்காவிட்டால் பிரகாஷ் ராஜ் சரியாக இருப்பார். அவரும் இல்லாவிட்டால் ஜெயம் ரவிக்குத்தான்பொருந்தும். இவர்களில் விக்ரமை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். கிடைக்காவிட்டால் அடுத்தவர்களைஅணுகுவேன். விரைவில் தெரிய வரும் என்று புன்னகையுடன் மலர்கிறார் மது.

மதுமிதாவுக்கு வயசு 21 தானாம். ஆனால் அதற்குள் முதிர்ந்த இயக்குனரைப் போல பேசுகிறார், திட்டமிடுகிறார்,தெளிவாக இருக்கிறார். இவரது தந்தை சுந்தரராமன் ஒரு டிவி சீரியல் தயா>ப்பாளர்.

சினிமா மீது தீராத மோகம் கொண்டுள்ள மது இதற்கு முன்பு ஆங்கிலத்தில் யுவர்ஸ் அபக்ஷனேட்லி எனற 14நிமிட டாக்குமெண்டரியை இயக்கியுள்ளர். அன்புக்காக ஏங்கும் ஒரு இளம் பெண்ணின் தவிப்புகளை இதில்பதிவு செய்துள்ளார் மது.

சமீபத்தில் நடந்த குறும்பட விழாவில் இந்த டாக்குமெண்டரிக்கு விருது கிடைத்ததாம். இந்தப் படத்தை ஐந்தேநாட்களில் முடித்து விட்டாராம்.

சிங்கப்பூரில் மல்டிமீடியா கோர்ஸ், நியூயார்க் திரைப்பட அகாடமியில் இயக்குநருக்கான படிப்பு என பக்காவாகவந்திறங்கியுள்ளார் மதுமிதா.

கோடம்பாக்கத்துக்கு ஒரு வித்தியாசமான டைரக்டர்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil