விஸ்வரூபமெடுத்த அந்த பிரச்சனை.. ட்விட்டரை விட்டு விலகுகிறாரா.. என்ன சொல்கிறார் பிரசன்னா?

சென்னை: ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் இருந்து நடிகர் பிரசன்னா வெளியேறப் போவதாக பரவிய தகவலுக்கு அவரது ஸ்டைலில் நடிகர் பிரசன்னா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Recommended Video

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட Dulquer Salman | Prabhakaran

துல்கர் சல்மானின் வாரனே அவசியமுண்டு படத்தில், நடிகர் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு 'பிரபாகரன்' என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அந்த படத்தை இந்த லாக் டவுனில் பார்த்துவிட்டு சில தமிழ் ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பினர்.

துல்கர் மன்னிப்பு

துல்கர் மன்னிப்பு

எந்தவொரு தலைவரையும் அவமதிக்கும் நோக்கில் அந்த பெயர் வைக்கப் படவில்லை என்றும், அப்படி யார் மனதாவது புண்பட்டு இருந்தால், நிச்சயம் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், அதற்காக, குடும்பத்தை இழுத்து கொச்சையாக பேச வேண்டாம் என நடிகர் துல்கர் சல்மான் வருத்தம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்.

பிரசன்னா சப்போர்ட்

பிரசன்னா சப்போர்ட்

துல்கர் சல்மானை சுற்றிய சர்ச்சையை உணர்ந்து கொண்ட நடிகர் பிரசன்னா, நம்ம ஊரில் எப்படி ஆணியே புடுங்க வேண்டாம், என்ன கொடுமை சரவணன் என பிரபல படங்களின் வசனத்தை பயன்படுத்துறோமோ அதே போல, பழைய மலையாள படத்தில் வந்த அந்த பெயரை பயன்படுத்தி உள்ளனர் என விளக்கம் அளித்திருந்தார்.

ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

ஆனால், ஆணியே புடுங்க வேண்டாம் என்பதும், ‘பிரபாகரன்' என்கிற ஆளுமை மிக்க ஒரு வார்த்தையும் ஒன்றா என நடிகர் பிரசன்னாவிடம் சில ரசிகர்கள் கேட்க, மேலும், பலர் பிரசன்னாவையும், அவரது குடும்பத்தினரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். இதுக்கெல்லாம் நீங்க சப்போர்ட் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்தனர்.

ட்விட்டருக்கு குட்பை

ட்விட்டருக்கு குட்பை

இப்படி தொடர்ந்து நடிகர் பிரசன்னாவுக்கு எதிரான கமெண்ட்டுகள் குவிந்து வந்த நிலையில், நடிகர் பிரசன்னா, ட்விட்டரை விட்டே விலகப் போவதாக வதந்திகள் வலம் வரத் தொடங்கின. சில ஆன்லைன் போர்ட்டல்கள், பிரசன்னா ட்விட்டரில் இருந்து விலகியதாகவும் செய்திகளை பரப்பத் தொடங்கியது தான் இதில் வேடிக்கையே.

திரும்பவும்

திரும்பவும்

இந்த விசயத்துக்காக ட்விட்டரை விட்டு பிரசன்னா விலகப் போவதில்லை என்பது, தொடர்ந்து அவர் பதிவிட்டு வரும் ட்வீட்களை பார்த்தே தெரிந்து கொள்ள முடிகிறது. இன்று தல அஜித்தின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்களை சொன்ன பிரசன்னா, ட்விட்டரில் இருந்து தான் விலகுவதாக வந்த செய்திகளையும் மறுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X