செம பர்த்டே பரிசு.. மகாவீர் கர்ணனாக கம்பீரம் காட்டும் விக்ரம்.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மகாவீர் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடிகர் விக்ரமின் பிறந்தநாள் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.

கோப்ரா டீம் வாழ்த்து

சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 16ம் தேதி காமன் டிபியை வெளியிட்ட கோப்ரா பட இயக்குநர், ஏப்ரல் 17ம் தேதி விக்ரமின் பிறந்த நாளன்று கோப்ரா டீமில் உள்ள அனைவரும் சியான் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறும் #WhyWeLoveChiyaan என்ற வீடியோவை போட்டு விக்ரமுக்கு பிறந்த நாள் பரிசை கொடுத்திருந்தார்.

பிறந்தநாள் பரிசு

அதே போல சியான் விக்ரமின் பிறந்த நாள் பரிசாக மலையாள இயக்குநர் ஆர்.எஸ். விமல் சூர்யபுத்ர மகாவீர் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, நடிகர் விக்ரமுக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கர்ணன் லுக்கில் விக்ரம் வில்லை கையில் ஏந்தி குறிப்பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

2000 கோடி வசூல்

2000 கோடி வசூல்

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மகாவீர் கர்ணன் படத்தை மலையாள இயக்குநர் ஆர்.எஸ். விமல் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'என்னு நின்டே மொய்தீன்' படம் சிறந்த இசைக்காக தேசிய விருதையும் பல விருதுகளையும் அள்ளியது. மகாவீர் கர்ணன் படத்தின் வசூல் 2000 கோடியை தாண்டும் என எதிர்பார்ப்பதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் விமல் கூறியுள்ளார்.

மல்டி லாங்குவேஜ்

மல்டி லாங்குவேஜ்

தமிழ், இந்தி மொழிகளில் உருவாகி வரும் மகாவீர் கர்ணன் திரைப்படம் மலையாள மொழியில் டப் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் நிறுத்தப்பட, கோப்ரா, பொன்னியின் செல்வன் என நடிகர் விக்ரம் பிசியானது குறிப்பிடத்தக்கது.

முந்துவது யார்

முந்துவது யார்

சியான் விக்ரம் நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் மகாவீர் கர்ணன் திரைப்படம் முதலில் ரிலீசாகுமா? அல்லது மணிரத்னம் இயக்கத்தில் பல நூறு கோடிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் முதலில் ரிலீசாகுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X