அந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறாரா மகேஷ் பாபு? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்த படத்திற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவிக்கும் நடிகராக வலம் வருகிறார் விஜய்.
இதேபோல் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் விஜய் எப்படியோ அதேபோல் டோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் நடிகர் மகேஷ் பாபு.

வசூல் வேற லெவலில் இருக்கும்
இருவருமே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தால் அந்தப் படத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும். இருவரும் இணைந்து நடிக்கும் பேன் இந்திய படமாக இருக்கும்.

மகேஷ் பாபுவுடன் அடுத்தடுத்து
இந்நிலையில் சமீபத்திய தகவல்களின்படி, இரண்டு நடிகர்களும் ஒரு படத்திற்காக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி மகேஷ் பாபுவுடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.

விஜய்யின் தளபதி 66
அவர்கள் 'மகரிஷி' படத்திற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்றனர். இப்போது, இயக்குனர் வம்ஷி தனது அடுத்த தமிழ் புராஜெக்ட்டில் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார். சமீபத்திய #GreenIndiaChallenge பிரச்சாரத்தின் போது மகேஷ் பாபு, விஜய் மற்றும் வம்ஷி இடையே ஒரு நல்ல உரையாடல் இருந்ததை பார்க்க முடிந்தது.
Recommended Video

விவரங்கள் விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் வம்ஷி - விஜய் படத்தின் தொடக்க விழாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. படத்தின் தொடக்க விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











