Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சொகுசு காரை வாங்கிய மகேஷ்பாபு… விலை எவ்வளவுனு தெரியுமா?
சென்னை : தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விலை உயர்த்தி Audi E Tron காரை வாங்கி உள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழகம், கேரளத்திலும் இவருக்கும், இவரது திரைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
தெலுங்கு நடிகர்களில் தனிப்பெரும் சக்தி வாய்ந்தவர் மகேஷ்பாபு.
தமிழ் சினிமாவையே கைப்பற்ற பிளான் போடும் பிரபலம்...அவர் வக்கிறது தான் சட்டமாமே
மகேஷ்பாபு
தெலுங்குத் திரையுலகில் சிரஞ்சீவிக்கு பிறகு ஆந்திரா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. பார்வையால் மிரட்டுவது, ஷார்ப்பான லுக், ரொமாண்டிக்கான பேச்சு மகேஷ்பாபுவின் தனி ஸ்டைல். இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தமிழில் போக்கிரி, கில்லியாகவும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
பரத் எனும் நான்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் சரியாக போகவில்லை. இருப்பினும் இவரது சில படங்கள் அவ்வப்போது தமிழில் ரிலீஸ் ஆகி வருகின்றன. பரத் எனும் நான் என்ற படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தது இதில் முதலமைச்சராக மகேஷ்பாபு நடித்திருந்தார்.
புதிய கார்
நடிகர் மகேஷ் பாபு Audi E-tron என்ற எலக்ட்ரின் எஸ்.யூ.வி. ரக கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும். சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத, மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஆடி-ஈ-ட்ரான் எப்படி இருக்கும் என்று பயன்படுத்தவும், ஆடி காரின் அனுபத்தையும் பெற ஆர்வமுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு விலையா ?
மகேஷ் பாபு வாங்கி உள்ள Audi E-tron வகை கார்கள் இந்தியாவில் ரூ.1.01 கோடி என்பதிலிருந்து தொடங்கி ரூ.1.19 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆடி எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்துள்ளார். இதில் பாதுக்கப்புக்காக 8 ஏர் பேக்குகள், மின்னும் சீட் பெல்ட்டுகள், பார்க்கிங் சென்சார்கள், ப்ரீடென்ஷனர்கள் மற்றும் லோட் லிமிட்டர்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
சர்க்காரு வாரி பாட்டா
நடிகர் மகேஷ்பாபு சர்க்காரு வாரி பாட்டா என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பரசுராம் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். அவர் இசையில் வெளியான பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.