பிரியங்கா சோப்ராவின் மார்பில் பட்ட கை.. பதறிய மகேஷ் பாபு.. வாரணாசி விழாவில் ஏற்பட்ட சங்கடம்

சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். மகாபாரதத்தை தழுவி 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபுவுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டது.

ராஜமௌலி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் 1500 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்தது மட்டுமின்றி ஆஸ்கர்வரை சென்றது. படத்துக்கு இசையமைத்த கீரவாணி ஆஸ்கர் விருதை தட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகான அடுத்த படத்தை இயக்குவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டார் ராஜமௌலி.

மகேஷ் பாபுவுடன் வாரணாசி: அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வாரணாசி என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்க; பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் இரண்டு பேரும் ஏற்றிருக்கக்கூடிய கேரக்டர் பெயரையும், அவர்களின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற ரோலையும், பிருத்விராஜ் கும்பா என்ற ரோலையும் ஏற்றிருக்கிறார்கள்.

Mahesh Babu Faces Awkward Moment With Priyanka Chopra at Varanasi Title Teaser Event
Photo Credit:

மகாபாரதத்தை தழுவி: இப்படமானது மகாபாரதத்தை தழுவி எடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க மகாபாரதமாக இல்லாமல் அதில் டைம் ட்ராவல், சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஆகியவைகளை கலந்து புதிய மேஜிக்கை ராஜமௌலி நிகழ்த்தவிருப்பதாகவும்; கண்டிப்பாக இந்திய சினிமாவின் மைல் கல்லாகவும், அதிக வசூல் செய்த படமாகவும் இது அமையும் என்றும் மௌலியின் ரசிகர்கள் அதீத நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.

பிரமாண்ட விழா: சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. அதற்கான பிரமாண்ட விழா ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். மகேஷ் பாபுவோ இயந்திர காளை ஒன்றில் அமர்ந்து கெத்து காட்டியிருந்தார். இந்நிலையில் அந்த விழாவில் அவருக்கு சங்கடமான சங்கதி ஒன்று நடந்தது தொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

பிரியங்கா சோப்ராவின் மார்பில் பட்ட கை: அதாவது பிரியங்கா சோப்ராவும், மகேஷ் பாபுவும் ஒன்றாக மேடையில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது இன்னொரு பக்கமாக திரும்பியிருந்த மகேஷ் பாபு அசைகையில் அவரது கை பிரியங்காவின் மார்பில் பட்டுவிட்டது. இதனை எதிர்பார்க்காத மகேஷ் பாபு உடனே பதறியடித்து பிரியங்காவை பார்க்க; அவர் கேஷுவலாக அதை எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சிகளில் இவ்வாறு நடப்பது சாதாரணமானதுதான் என்றாலும், மகேஷ் பாபு உடனே பதறியது அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X