விஜய் மாநாட்டுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. இது மகேஷ் பாபு மாநாடு.. ரசிகர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்!
ஹைதராபாத்: பான் இந்தியா பெயரை ஆரம்பித்து வைத்த ராஜமெளலி அடுத்ததாக க்ளோப் ட்ரோட்டர் என டோலிவுட் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியை மகேஷ் பாபுவை வைத்து செய்யவுள்ளார். அதன் முதல் நிகழ்வாக இன்றைய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள க்ளோப் ட்ரோட்டர் என அழைக்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் மற்றும் டைட்டில் இன்று வெளியாக உள்ளது.

ஏற்கனவே வாரணாசி தான் படத்தின் டைட்டில் என சில தகவல்கள் கசிந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அலைகடல் போல மகேஷ் பாபு ரசிகர்கள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கூடியுள்ளனர். ஒரு சினிமா விழாவாக அல்லாமல் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாடு போல இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அறிமுகமே பிரம்மாண்டம்: ஷங்கரை எல்லாம் தாண்டி தற்போது உலகளவில் இந்திய சினிமாவை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் வேலையை இயக்குநர் ராஜமெளலி பார்த்து வருகிறார். தமிழ்நாட்டில் மட்டும் அவர் இருந்திருந்தால், இந்நேரம் ரஜினிகாந்த் - கமல் காம்போ படத்தை இயக்க சரியான இயக்குநரை தேடி அலைய தேவையில்லை என்கின்றனர். டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சியையே இப்படி பிரம்மாண்டமாக செய்துள்ளார். ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் லைவிலேயே இந்த நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே லைவிலும் கண்டு ரசிக்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் லைவ்: நவம்பர் 15ம் தேதி இரவு 7 மணி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் லைவாகவே கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதை போல ஒட்டுமொத்த மகேஷ் பாபு ரசிகர்களும் வீட்டில் இருந்தபடியே சேஃப்ட்டியாக இந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என ராஜமெளலி மற்றும் மகேஷ் பாபு அறிவித்துள்ளனர். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கட்டாயம் பாஸ் உடன் தான் உள்ளே நுழைய வேண்டும் என்றும் பாஸ் வாங்காதவர்கள் தேவையற்ற தொல்லைகளை தர வேண்டாம் என்றும் ரசிகர்களின் சேஃப்ட்டி ரொம்பவே முக்கியம் என கூட்ட நெரிசல் அபாயங்களை கருத்தில் கொண்டு மகேஷ் பாபு முன்கூட்டியே எச்சரித்துள்ளார்.
மகேஷ் பாபுவின் மாநாடு: 100 அடிக்கு மிகப்பெரிய திரை ரசிகர்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. என்னதான் வீட்டில் இருந்து பார்க்கலாம் என்றாலும், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கடல் அலை போல நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ள 2000 போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
சேஃப்ட்டி முக்கியம்: மகேஷ் பாபுவையும் ராஜமெளலி படத்தையும் ரசிகர்கள் கொண்டாடலாம். ஆனால், அதை விட நம்மை நம்பி உள்ள குடும்பத்தையும் நம்முடைய உயிரும் முக்கியம் என்பதை ரசிகர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு, தள்ளிவிட்டு ஓடுவது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதே ராஜமெளலி மற்றும் மகேஷ் பாபுவின் ஆசையாக உள்ளது. பிரியங்கா சோப்ரா, ஸ்ருதிஹாசனின் பர்ஃபார்மன்ஸ், மகேஷ் பாபுவின் கிராண்ட் என்ட்ரி அவருடைய ஃபர்ஸ்ட் லுக், வில்லன் கும்பாவின் அட்டகாசமான என்ட்ரி உள்ளிட்டவை இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











