Mahesh Babu: நீங்க தான் எனக்கு அப்பா.. நீங்க தான் எனக்கு அம்மா.. மேடையில் உருகிய மகேஷ் பாபு!

ஹைதராபாத்: மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், நேற்று அந்த படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பெரும் கூட்டமாக வந்து மகேஷ் பாபுவின் பேச்சைக் கேட்டு ரசித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேடையில் ஏறி கடைசியாக மகேஷ் பாபு பேசும்போது ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டார்.

இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, மீனாட்சி சவுத்ரி, ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் குண்டூர் காரம் மற்றும் ஹனுமன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mahesh Babu gets emotional at Guntur Kaaram pre release event


கடைசி படம் ஓடல: கீதகோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த சர்க்காரு வாரி பாட்டா கடைசியாக வெளியான நிலையில், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்கிற முயற்சியில் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பூஜா ஹெக்டேவை அதிரடியாக மகேஷ்பாபு நீக்கினார். அவருக்கு பதில் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில பல ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போன நிலையில், வரும் ஜனவரி 12ஆம் தேதி குண்டூர் காரம் திரைப்படம் வெளியாகிறது.

ஸ்ரீலீலாவுக்கு பாராட்டு: தெலுங்கு திரை உலகில் இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா கடந்த ஆண்டு பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தில் அவருடைய வளர்ப்பு மகளாக நடித்திருந்தார். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் மெயின் ஹீரோயினாக நடித்துள்ள ஸ்ரீலீலாவின் நடனம் தன்னை மிகவும் பிரமிக்க செய்ததாக மகேஷ்பாபு பாராட்டியிருந்தார். என்ன ஸ்பீடு என ஸ்ரீலீலாவின் ஆட்டத்தை பாராட்டிய மகேஷ் பாபு அவரது நடிப்பு நிச்சயம் ரசிகர்களை இந்த படத்தில் கவரும் என்றும் கூறியிருந்தார்.


மகேஷ் பாபுவை பாராட்டிய மீனாட்சி சவுத்ரி: நடிகை மீனாட்சி சவுத்ரி பேசும்போது இந்தியாவிலேயே சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகர்களில் மகேஷ்பாபுவும் ஒருவர் என்று கூறியிருந்தார். பெரும்கூட்டத்திற்கு மத்தியில் கடைசியாக பேசிய மகேஷ் பாபு கண்கலங்கியும் கையெடுத்து கும்பிட்டும் பேசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நீங்க தான் எனக்கு அப்பா, அம்மா: கடந்த 2022 ஆம் ஆண்டு அடுத்தடுத்து தனது அம்மா மற்றும் அப்பாவை இழந்த மகேஷ் பாபு அதன் பிறகு ரசிகர்களை சந்தித்து பேசிய நிலையில், நீங்க தான் எனக்கு அப்பா, நீங்க தான் எனக்கு அம்மா, நீங்க தான் எனக்கு எல்லாம் என பேசி கூஸ்பம்ப்ஸ் அடையச் செய்தார்.

ராஜமெளலி படம்: குண்டூர் காரம் படத்தைத் தொடர்ந்து அடுத்து ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பட்ஜெட்டே 1000 கோடி என்கின்றனர். இந்தோனேஷியாவில் இருந்து பிரபல நடிகையையும் தீபிகா படுகோனையும் ஜோடியாக்க ராஜமெளலி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X