மெழுகுச் சிலை போன்று இருக்கும் மகேஷ் பாபுவுக்கு மெழுகுச் சிலை வைக்கும் மேடம் டுசாட்ஸ்
ஹைதராபாத்: மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் நடிகர் மகேஷ் பாபுவுக்கு மெழுகுச் சிலை வைக்கிறது.
உலக அளவில் பிரபலமாக உள்ளவர்களுக்கு மெழுகுச் சிலை வைத்து கவுரவிக்கிறது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம். இந்நிலையில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் நடிகர் மகேஷ் பாபுவுக்கு மெழுகுச் சிலை வைக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து சிலை செய்பவர்கள் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து அளவு எடுத்துள்ளனர்.
மகிழ்ச்சி
தனக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைப்பதால் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள மகேஷ் பாபு இது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்
42 வயதானாலும் குழந்தை சிரிப்புடன் மெழுகுச் சிலை மாதிரி தான் இருக்கிறார் மகேஷ் பாபு. மெழுகுச் சிலைக்கே மெழுகுச் சிலையா என்று அவரின் ரசிகைகள் கேட்டுள்ளனர்.

பெருமை
எங்க பிரின்ஸுக்கு மெழுகுச் சிலை வைக்கிறார்கள் என்று மகேஷ் பாபு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மேடம் டுசாட்ஸ் பிரபாஸுக்கு மெழுகுச் சிலை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 125 கோடி
மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 20ம் தேதி ரிலீஸான பாரத் அனே நேனு படம் உலக அளவில் ரூ. 125 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறார் இயக்குனர் கொரடலா சிவா.


Click it and Unblock the Notifications











