மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த மகேஷ் பாபு: தீயாக பரவிய புகைப்படம்
சென்னை: நடிகர் மகேஷ் பாபு தனது மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த பாரத் அனே நேனு பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகிறது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
அமெரிக்காவில் ராம் சரண் தேஜா, சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் செய்த வசூல் சாதனையை பாரத் அனே நேனு முறியடித்துள்ளது.
மனைவி
படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினால் மனைவியிடம் அனுமதி பெற்று தான் நடிப்பார் மகேஷ் பாபு. இந்நிலையில் அவர் தனது மனைவி நம்ரதாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படம்
மகேஷ் பாபு, நம்ரதாவின் முத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்தவர்கள் மகேஷ் பாபு உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சீன்
பப்ளிசிட்டி தேடுவதோ, சீன் போடுவதோ மகேஷ் பாபுவின் கேரக்டரே இல்லை. இந்நிலையில் அவர் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மகேஷ்
முன்னதாக கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமாந்துடு படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றிய பாரத் அனே நேனுவும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் பட சாதனைகளை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











