டாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்: மகேஷ் பாபு அடம்
ஹைதராபாத்: கொரடலா சிவா படத்தில் சட்டை இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்க மகேஷ் பாபு மறுத்துவிட்டார்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. 39 வயதாகும் அவர் இன்னமும் அதிக வசீகரத்துடன் ரசிகைகளின் மனம் கவர்ந்த் ஹீரோவாக உள்ளார். அவர் தற்போது கொரடலா சிவா இயக்கி வரும் பெயர் வைக்காத படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவா மகேஷ் பாபுவிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

டாப்லெஸ்
படத்தில் வரும் சண்டைக் காட்சியில் சட்டையை கழற்றிவிட்டு சிக்ஸ் பேக்ஸை காட்டுமாறு சிவா மகேஷ் பாபுவை கேட்க அவரோ முடியாது என்று தெரிவித்துவிட்டார்.

நேஒக்கடினே
முன்னதாக நேஒக்கடினே படத்தில் டாப்லெஸ்ஸாக நடிக்குமாறு இயக்குனர் சுகுமார் கேட்டதற்கும் மகேஷ் பாபு அளித்த பதில் முடியாது என்பது தான்.

ஜூனியர் என்.டி.ஆர்.
தெலுங்கு முன்னணி ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர். எல்லாம் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ள போதிலும் மகேஷ் பாபு மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளார்.

மகன்
படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்ற போதிலும் மகேஷ் பாபு தனது மகன் கௌதமின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.


Click it and Unblock the Notifications











