மோசமான வசூல்.. தொலைக்காட்சிக்கு பார்சலான குண்டூர் காரம்.. மகேஷ் பாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ஆல வைகுந்தபுரமுலோ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த திரைப்படம் குண்டூர் காரம். இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாததால், தற்போது படம் தொலைக்காட்சிக்கு பார்சலாகி உள்ளது.
குண்டூர் காரம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஆக்ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக்கப்பட்டு இருந்தது.

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம்: ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. வழக்கமாக மகேஷ்பாபுவின் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் அந்த வகையில் முதல் நாளில் படம் நல்ல வசூலை பெற்றது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அப்போது, வெளியான ஹனுமான் திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடி வசூலை அள்ளியது.
ஓடிடியில் வெளியானது: இதையடுத்து குண்டூர் காரம் திரைப்படம், பிப்ரவரி 9-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. ஓடிடியில் கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. ஆனால், தமிழ் மற்றும் இந்தி பார்வையாளர்களிடமிருந்தும் மகேஷ் பாவுவின் நடிப்பையும் படத்தையும் பாராட்டினார்கள்.
குண்டூர் காரம் தொலைக்காட்சியில்: இந்நிலையில், மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெமினி டிவி பெற்று இருப்பதால், இப்படம் ஏப்ரல் 9ந் தேதி அதாவது தெலுங்கு வருஷ பிறப்பிற்கு ஒளிபரப்பாக உள்ளது. தியேட்டரில் வசூலை அள்ளாத இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி டிஆர்பியை பெற திட்டமிட்டுள்ளது.
SSMB 29: தற்போது மகேஷ் பாபு ராஜமொளலியின் படத்தில் கமிட்டாகி உள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன, விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு மகாராஜா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என்று பெயரிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











