Don't Miss!
- News
நெல்லை கல் குவாரி விபத்து..! பாறைக்கடியில் வந்த துர்நாற்றம்! 6வது நபரின் நிலை என்ன? பரபர பின்னணி..!
- Finance
சொந்த நிறுவனத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அங்கிதி போஸ்.. சிங்கப்பூரில் நடந்தது என்ன..?
- Automobiles
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க தங்கள் மனைவியை மனதளவில் ரொம்ப கொடுமைப்படுத்துவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தி திரையுலகம் எனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாதுன்னு சொன்ன மகேஷ் பாபு.. இத்தனை கோடி சம்பளமா?
சென்னை: இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் நடந்த விழாவில் நடிகர் மகேஷ் பாபு பேசி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் தனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்த்து மற்றும் இங்கே உள்ள ரசிகர்கள் தன் மீது செலுத்தும் அன்புக்கு என்றுமே கடமைப் பட்டு நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என மகேஷ் பாபு அதிரடியாக பேசிய நிலையில், அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்கிற தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! சிபிராஜ் உருக்கம்

இந்தி படங்களுக்கு நோ
இந்தி சினிமாவில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனக்கான நட்சத்திர அந்தஸ்த்து இங்கே தான் உள்ளது என்றும், தெலுங்கு சினிமாவில் நடிப்பது தான் தனக்கு கம்ஃபர்ட் என்றும் கூறினார். மேலும், பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அதிரடி காட்டி உள்ளார்.

ஏகப்பட்ட வாய்ப்புகள்
இதுவரை பல பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தனக்கு வந்ததாகவும், பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தன்னை அணுகியதாகவும் கூறிய மகேஷ் பாபு, ஆனால், நான் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டேன் என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

சம்பளம் தர முடியாது
அனைத்திற்கும் மேலாக பாலிவுட் சினிமாவால் எனக்கான சம்பளத்தை தர முடியாது என்றும், நானும் என் நேரத்தை அதற்காக வீணடிக்க விரும்பவில்லை. டோலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டே இந்திய சினிமா ரசிகர்களை எந்த அளவுக்கு மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு மகிழ்வித்துக் கொண்டிருப்பேன் என மகேஷ் பாபு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மகேஷ் பாபு சம்பளம் எவ்வளவு
இந்தி திரையுலகத்தால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என நடிகர் மகேஷ் பாபு கூறிய நிலையில், ஒரு படத்துக்கு அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை 60 கோடி ரூபாய் வரை படங்களுக்கு வாங்கி வந்த மகேஷ் பாபு சமீப காலமாக 80 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குகிறாராம்.

கான்களுக்கே அவ்வளவு தான்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே ஒரு படத்துக்கு 80 கோடி ரூபாய் வரையில் தான் வாங்குகின்றனர் என்றும் அதனால் தான் மகேஷ் பாபு அப்படி சொல்லி இருக்கிறார் என்றும் அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்படப் போவதாகவும் கூறுகின்றனர்.