Mahesh Babu Son: 18 வயது புயலாக மாறிய மகேஷ் பாபு மகன்.. டோலிவுட்டில் அடுத்த வாரிசு ரெடி போல!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் மகன் கெளதம் கட்டமனேனி இன்று தனது 18வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தனது மகன் 18 வயதை நிரம்பிய நிலையில், சந்தோஷத்தில் அப்பா மகேஷ் பாபு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா 12 வயதிலேயே விளம்பர படங்களில் நடித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பில்போர்டுகளை அப்பாவுக்கு முன்னதாகவே அலங்கரித்து விட்டார்.

தந்தையை போலவே செம ஸ்மார்ட்டாகவும் அழகாகவும் இருக்கும் மகேஷ் பாபுவின் மகன் சமீபத்தில் தனது பள்ளி படிப்பை முடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
18 வயசு புயல்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணாவின் மகன் தான் மகேஷ் பாபு. டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராகவே மகேஷ் பாபு மாறிவிட்டார். அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படத்திற்காக தயாராகி வரும் மகேஷ் பாபு விரைவில் அந்த படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பிக்க காத்திருக்கிறார். மகேஷ் பாபுவின் மூத்த மகன் கெளதம் இன்று தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மகனுக்கு மகேஷ் பாபு வாழ்த்து: நடிகர் மகேஷ் பாபுவுக்கும் அவரது மனைவி நம்ரதாவுக்கும் 2005ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்த கெளதம் இன்று தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். "ஹேப்பி 18வது பிறந்தநாள் மகனே.. இப்போதைக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொள்.. சந்தோஷமாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணு.. உன்னை பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தனது மகன் பிறந்தநாளுக்கு மகேஷ் பாபு வாழ்த்தியுள்ளார்.
சின்ன புலி: மகேஷ் பாபுவின் மகன் பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்த நிலையில், மகேஷ் பாபு ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கீழ் ஹேப்பி பர்த்டே சின்ன புலி என கமெண்ட் போட்டு வருகின்றனர். தெலுங்கு திரையுலகின் டைகராக மகேஷ் பாபு உள்ள நிலையில், சீக்கிரமே சினிமாவில் அடுத்த வாரிசாக கெளதம் வருவாரா? அல்லது வேறு துறையில் தனது திறமையை காட்டுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











