அமெரிக்காவுக்கு ஃபேமிலி டூர்னு சொன்னாங்க.. பிரபல ஹீரோவுக்கு நியூயார்க்கில் திடீர் அறுவை சிகிச்சையாம்
ஐதராபாத்: பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு. முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் மூலம் தமிழுக்கும் வந்தார். அவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளன.
இவர் தற்போது நடித்து ரிலீஸ் ஆன படம், சரிலேரு நீக்கெவ்வரு. இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்திருந்தார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வம்சி பைடிபள்ளி
அனில் ரவிபுடி இயக்கியுள்ள இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த பட அறிவிப்பை வெளிட்டார் மகேஷ்பாபு. அந்தப் படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

அமெரிக்கா
இதற்கிடையே சில மாதங்கள் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ள மகேஷ்பாபு குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சில மாதங்கள் ஓய்வெடுக்கும் அவர், அதற்கு பிறகு ஐதராபாத் திரும்பி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதற்கிடையே அமெரிக்கா சென்றுள்ள அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பில் காயம்
கடந்த 2014 ஆம் ஆண்டு அகடு என்ற படத்தில் நடித்தார் மகேஷ்பாபு. அப்போது படப்பிடிப்பில் நடந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. இப்போது அந்த இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது.

மீண்டும் சிகிச்சை
தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டதால், காயத்துக்கு சிகிச்சை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதனால் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











