பான் மசாலா விளம்பரத்தில் மகேஷ் பாபு.. மொத்த மானத்தையும் வாங்கும் நெட்டிசன்கள்.. இப்படி ஆகிடுச்சே!

ஹைதராபாத்: பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் கேஜிஎஃப் நடிகர் யஷ் என இருவருமே தங்களுக்கு வந்த பான் மசாலா விளம்பர வாய்ப்புகளுக்கு முடியவே முடியாது என சொல்லி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளினர்.

இந்நிலையில், டோலிவுட்டின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் உடன் இணைந்து நடித்த பான் மசாலா விளம்பரத்தை இந்தியளவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாலிவுட்டால் முடியாதுன்னு சொன்னாரே

பாலிவுட்டால் முடியாதுன்னு சொன்னாரே

தனக்கான சம்பளத்தை தர பாலிவுட் திரையுலகத்தால் முடியாது எனக் கூறிய மகேஷ் பாபுவா? பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளார் என நெட்டிசன்கள் அவரது விளம்பர போஸ்டர்களை ஷேர் செய்து பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். பாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு இப்படி பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பது தான் மகேஷ் பாபுவின் உயர்ந்த கொள்கையா என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

மானத்தை வாங்குறாங்க

மானத்தை வாங்குறாங்க

ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டனர். ஆனால், தென்னிந்திய நடிகரான மகேஷ் பாபுவும் நடித்திருக்கிறாரே, ஆனால், அவரை ஏன் யாருமே ட்ரோல் செய்யவில்லை என அவரது பழைய விளம்பரத்தை எடுத்து பயங்கரமாக தற்போது வட இந்தியர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

டபுள் ஸ்டாண்டர்ட்ஸ்

டபுள் ஸ்டாண்டர்ட்ஸ்

பாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் என சொன்னதும், பான் மசாலா விளம்பரத்தில் நடிச்சதும் ஒரே ஆளா? என அந்நியன் பிரகாஷ் ராஜ் மாதிரி ட்வீட் போட்டு, இரட்டை வேஷம் போடாதீங்க உங்க டபுள் ஸ்டாண்டர்ட் நிலைப்பாடு தெளிவாக தெரிந்து விட்டது என பாலிவுட் ரசிகர்கள் நடிகர் மகேஷ் பாபுவை ட்ரோல் செய்தனர்.

அல்லு அர்ஜுன், யஷ்

அல்லு அர்ஜுன், யஷ்

எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் புகையிலை விளம்பரங்களில் நடித்து இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல மாட்டோம் என இருக்கும் அல்லு அர்ஜுன் மற்றும் கேஜிஎஃப் நடிகர் யஷ் எங்கே? பான் மசாலா விளம்பரத்தில் காசுக்காக நடிக்கும் மகேஷ் பாபு எங்கே? என மகேஷ் பாபுவின் ஹேட்டர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சொதப்பிய படம்

சொதப்பிய படம்

சமீபத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்தவர்கள் பலரும் என்ன படம்டா இது? என மோசமான விமர்சனங்களை முன் வைத்து இருந்தனர். பாலிவுட் குறித்து மகேஷ் பாபு மேஜர் பட விழாவில் பேசியதால் தான் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என படக்குழு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X