அஜித் அப்படிப்பட்டவர்தான்.. ஸ்ரீதேவியின் தங்கை இப்படி ஓபனாக பேசிட்டாங்களே.. செம போங்க

சென்னை: தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மெகா ஹிட்டாகி வசூல் சாதனை புரிந்திருக்கும் சூழலில்; நடிகையும், ஸ்ரீதேவியின் தங்கையும் மகேஸ்வரி அஜித் குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் அவருக்கென்ற ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரது படம் வந்தால் திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள்.

ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.

தல டூ ஏகே : தொடர்ந்து தீனா, வரலாறு உள்ளிட்ட படஙக்ள் அவருக்கு வெற்றி படங்களாக அமைய மீண்டும் தோல்வியை சந்தித்தார். பிறகு மீண்டு வந்து பில்லா படத்தில் வெற்றி கண்டால். அதன் பிறகும் அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. கடைசியாக அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்கியிருந்தார்.

Maheshwari Talks about Ajith at Latest Interview

வசூல் சாதனை: படத்தை பார்த்த ஏகே ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. மேலும் இது முழுக்க முழுக்க ஃபேன்பாய் சம்பவம் என்று உற்சாகத்தில் மிதந்தார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. கடுமையான விமர்சனத்தை அவர்கள் முன்வைத்துவருகிறார்கள். இருப்பினும் உலகம் முழுவதும் அந்தப் படம் 200 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து நடிகையும், ஸ்ரீதேவியின் தங்கையுமான மகேஸ்வரி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

அஜித் பற்றி மகேஸ்வரி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "உல்லாசம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்தேன். அவர் ஒரு பக்காவான ஜென்டில்மேன் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அவர் க்யூட்,சூப்பர் ஸ்டார், அழகு என்பதை காட்டிலும் மிக நல்ல மனிதர் அவர் கலாசாரம் தெரிந்து வளர்க்கப்பட்டவர். அதேபோல் அவர் எப்போதும் மற்றவர்களை பற்றி யோசிப்பார். நிறைய பேர் அப்படி இருக்கமாட்டார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X