மகாராஜா மாஸ் வெற்றி! ஆனாலும் சம்பளத்தைக் குறைத்த விஜய் சேதுபதி! ஆச்சர்யப்பட வைக்கும் காரணம்!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சைடு கேரக்டர்களில் நடித்து, கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் விஜய் சேதுபதி குறித்தும் பரவலாக பேசப்பட்டது.
அதன் பின்னர் தனக்கு கிடைத்த நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருந்த விஜய் சேதுபதியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. கதாநாயகன் மட்டும் இல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாப்பத்திரங்கள், கௌரவ வேடங்கள் என தொட்ட இடத்தில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்து வந்தார் விஜய் சேதுபதி.

சமீபத்தில் இந்தி சினிமா பக்கம் எட்டிப் பார்த்துள்ள விஜய் சேதுபதி அங்கும் நல்ல விமர்சனங்களையே பெற்றார். விஜய் சேதுபதி தொடர்ந்து தனது படங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகின்றார்.
விஜய் சேதுபதி 50: இந்நிலையில் இவரது 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், திரைப் பிரபலங்கள் பலர் இந்த படத்தைப் பார்த்த பின்னர் நல்ல விமர்சனங்களையே கொடுத்தனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வசூல் வேட்டை: மகாராஜா படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் மகாராஜா படத்தின் வெற்றியை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கொண்டாடினர். படம் இதுவரை ரூபாய் 55 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு வெளியான படங்களில் 55 கோடிகளை விரைவில் வசூல் செய்த படமாக மகாராஜா மாறியுள்ளது.
சம்பளத்தைக் குறைத்த சேதுபதி: தனது ஐம்பதாவது படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை ரூபாய் 15 கோடிகளில் இருந்து 10 கோடிக்கு குறைத்துள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றது. தனது சம்பளத்தைக் குறைப்பதால் தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் செலவு குறையும் என யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளாராம் சேதுபதி. மேலும் தனது 50வது படத்தின் பிரமாண்டமான வெற்றிக்குப் பின்னர் விஜய் சேதுபதி தனது சம்பளத்தைக் குறைத்துள்ளது என்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சையையும் ஏற்படுதியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











