தெரியாமல் நடந்துச்சு.. ஸாரி.. பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!
சென்னை : நடிகர் துல்கர் சல்மான் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
மலையாளத்தில் துல்கர் சல்மான் கடைசியாக 'வரனே அவாசியமுண்டு' என்ற படத்தில் நடித்து இருந்தார். இது தான் தயாரிப்பு ரீதியாக துல்கர் தயாரித்த முதல் படமும் கூட 'வே ஃபேரர் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பை துவங்கி எம் ஸ்டார் என்டர்டைன்மெண்டுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் பெண் பத்திரிகையாளரின் புகைப்படம் ஒன்று ஒரு காட்சியில் பேனர் ஒன்றில் வைக்கபட்டு இருந்தது. இந்த காட்சியை பார்த்த அந்த பெண் பத்திரிகையாளர் இதை உடனே ட்விட்டரில் பதிவிட்டு துல்கருக்கு டேக் செய்து கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இதில், என் அனுமதியின்றி என்னை படத்தில் நடிக்க வைத்ததற்கு நன்றி என்னுடைய அனுமதியின்றி என் புகைப்படத்தை படத்தில் பயன்படுத்தியதற்கு எனக்கு சரியான சன்மானம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
மேலும் இந்த படத்தில் ஒரு முறை அல்ல இரு முறை என் புகைப்படம் காட்டபட்டுள்ளது. நான் பத்திரிகையாளராக உங்கள் படத்தின் விளம்பரத்திற்காக பணியாற்றியிருக்கிறேன் என்று பலர் கோபமடைந்து இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்
இதற்கு, மிக துரிதமாக செயல் பட்டு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். இதில் நடந்த தவறுக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என தைரியமாக முன் வந்து கூறியுள்ளார். மேலும் எந்த இடத்தில் இந்த தவறு நடந்தது, யாரால் நடந்தது என்று, நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இருந்தும் நடந்த இந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

துல்கர் சல்மானின் இந்த ட்விட்டிற்கு பதில் கூறியுள்ள பெண் பத்திரிகையாளர் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட்டு பதில் அளித்ததற்கு பெரும் மகிழ்ச்சி ஆனால் இதே நேரத்தில் படம் இணையத்தில் நெட்பிளிக்ஸில் பலரால் பார்க்கபட்டு வருகிறது. இதனால் நெட்பிளிக்ஸை தொடர்பு கொண்டு என் புகைப்படத்தை நீக்க அல்லது அதை மறைக்க ஏதேனும் செய்யுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.

சினிமாக்களில் பல நேரங்களில் ஆர்ட் டிபார்மண்டின் கீழ் தான் காட்சிகளில் வைக்கப்படும் போஸ்டர்கள் புகைப்படங்கள் என்று அனைத்தும் உருவாக்கப்படும். இப்படியிருக்க பெண் பத்திரிக்கையாளரின் புகைப்படம் பேனர் ஒன்றில் வைக்கபட்டது தெரியாமல் நடந்த தவறா அல்லது என்ன என்பதை தயாரிப்பாளர் என்ற முறையில் துல்கர் சல்மான் தான் விசாரித்து விளக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











