வெறித்தனமான வொர்க் அவுட்.. இந்த வயசுலயும் லாலேட்டன் பிட்னசுக்கு இதுதான் காரணமா?
கொச்சி : நடிகர் மோகன்லால் மல்லுவுட்டில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார் மோகன்லால்.
இவர் த்ரிஷ்யம் 3 படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். 62 வயதான மோகன்லால் லாலேட்டன் என்ற பெயரால் ரசிகர்களால் விருப்பத்துடன் அழைக்கப்பட்டு வருபவர். தன்னுடைய இயல்பான மற்றும் கம்பீரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

சிறந்த பின்னணி பாடகர்
நடிப்பு மட்டுமில்லாமல் பின்னணி பாடுவதிலும் இவர் சிறந்து விளங்குகிறார் மோகன்லால். இவரது மகன் பிரணவும் தற்போது மலையாளப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மரைக்காயர் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

மரைக்காயர் படம்
நடிகர் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மரைக்காயர் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இவரது நடிப்பு பெறும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும் மோகன்லாலுடன் நடித்திருந்தினர்.

விஜய்யுடன் ஜில்லா படம்
தமிழிலும் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் மோகன்லால். விஜய்யுடன் இணைந்து நடித்த ஜில்லா படத்தில் தன்னுடைய நடிப்பால் மிரட்டியிருந்தார் இவர். இவரது திரனோட்டம் என்ற அறிமுகப்படம் சுமார் 25 ஆண்டுகள் தாமதமாகவே ரிலீசானது.

சிறப்பான த்ரிஷ்யம் படம்
இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் கமல், கவுதமி நடிப்பில் வெளியானது. மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வொர்க் அவுட் வீடியோ
இந்நிலையில் தான் வெறித்தனமான வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். இந்த வொர்க் அவுட்டை மிகவும் சீரியசாக அவர் இந்த வீடியோவில் செய்துள்ளார். அவருக்கு அவருடைய பிட்னஸ் கோச் உதவி செய்வதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











