‘தல’ ஸ்டைலைப் பாலோ செய்யும் மம்முட்டி, மோகன்லால், ப்ரித்வி....
சென்னை: மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் என மலையாள நடிகர்கள் அஜீத் வழியைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்களாம்.
தலையெல்லாம் நரைத்து வழுக்கை விழுந்தாலும் கூட விக் வைத்துக் கொண்டு டை அடித்துக் கொண்டு காலேஜ் போகும் நாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் அஜீத் 'சால்ட் அண்ட் பெப்பர்' ஸ்டைல் என பாதி நரைத்தும் நரைக்காத தலையுடன் புது டிரண்டை தமிழில் அறிமுகப் படுத்தினார்.
தனது சமீபத்திய படங்களிலெல்லாம் அஜீத் அவ்வாறே தோன்றினார். அவரது ரசிகர்களும் அதனை மிகவும் ரசிக்கவே செய்தனர்.

ரசிகர்களின் ஆதரவு...
அஜீத்தின் தோற்றத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவைத் தொடர்ந்து சில மலையாளப் பட நாயகர்களும் தல வழியைப் பின்பற்ற முடிவு செய்து விட்டார்களாம்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்...
அதன்படி, மலையாள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தங்களது புதிய படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார்களாம்.

புதிய படங்கள்...
அதன்படி, மம்மூட்டி தனது கேங்ஸ்டார் படத்திலும், மோகன்லால் மிஸ்டர் பிராஃட் படத்திலும், பிரித்விராஜ் தனது 7வது நாள் படத்திலும் பாதி நரைத்த தோற்றத்தில் தோன்ற உள்ளார்களாம்.

போஸ்டர்கள்...
இத்தகவலை வெளியாகியுள்ள அப்படங்களின் போஸ்டர்கள் உறுதி செய்கின்றன.

தல போல வருமா...
மலையாள நடிகர்கள் தல வழியைப் பின்பற்றுவது ஒருபுறம் இருக்க, நம்ம தல அவரோட அடுத்த படத்துல வேற ஏதோ லுக்குல வந்து கலக்கப் போறதா தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











