Mammootty: கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.. மம்முட்டி கொடுத்த அதிர்ச்சி!
சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக இணையத்தில் வதந்தி பரவியது. இது உண்மை இல்லை என சொல்லப்பட்டாலும், அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தது அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. தற்போது மம்முட்டி தனதும் உடல் நலம் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
மலையாள ரசிகர்களுக்கு மட்டுமில்லை, தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக இருக்கிறார் நடிகர் மம்முட்டி. கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட மம்முட்டி சிகிச்சைக்காக சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு என்ன ஆச்சு, அவர் என்ன பாதிப்பை சந்தித்தார் என ரசிகர்கள் கவலையில் இருந்த நேரத்தில், சக நடிகரான மோகன்லால் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை கோவிலில் மம்மூட்டிக்கு சிறப்பு பிரசாதம் செய்தார். இதனால், மம்முட்டிக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பதறிப்போனார்கள். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம், அவரின் நெருக்கமான நண்பர் மம்முட்டி நோயிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்தார். ஆனால், அவர் எந்த மாதிரியான உடல்நலக் குறைபாட்டைச் சந்தித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

நடிகர் மம்முட்டி: இந்நிலையில், தொண்டு நிறுவனமான கேர் & ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷனின் 16வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி, கண் பார்வையும், கேட்கும் திறனும் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. நம்மால் கேட்க முடிவதால் தான் சத்தத்தை குறைக்க சொல்ல முடியும். நான் கடந்த ஆண்டு வாசனை மற்றும் ருசியை உணர முடியாமல் ஒருவகையான அறிய நோயால் பாதிக்கப்பட்டேன். இப்போது அதில், இருந்து மெல்ல மெல்ல சரியாகி வருகிறேன். சில விஷயத்தை நாம் இழந்த பின் தான் அதன் அருமையை நம்மால் உணர முடிகிறது என்றார். மம்முட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக பரவிய வதந்திக்கு தற்போது மம்முட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கைவசம் உள்ள படம்: தற்போது மம்முட்டி, நடித்து வரும் Patriot படத்தை Mahesh Narayanan இயக்குகிறார். இதில், மோகன்லால், குஞ்சாக்கோ போபன், ஃபகத் பாசில், நயன்தாரா, ராஜீவ் மேனன், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மூலம் 18 ஆண்டுகள் கழித்து மம்முட்டி மோகன்லாலுடன் மீண்டும் இணைந்து உள்ளார். அதே போல, அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் பாதயாத்திரை படத்திலும், தனுஷின் D55 படத்திலும் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











