ரூ3.5 கோடி.. சொகுசு கார் வாங்கிய நடிகர்.. நம்பர் பிளேட்டுக்கு மட்டுமே ஒரு கார் வாங்கும் செலவு!

சென்னை : மலையாள நடிகர் பிரித்விராஜ் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரை வாங்கியுள்ளார். காரின் நம்பர் பிளேட்டுக்காக மட்டும் பல லட்சங்களை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரித்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான "கனா கண்டேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரித்விராஜ், கனா கண்டேன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், மொழி என பல நேரடி தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். இவருக்கு சினிமாவில் எவ்வளவு ஆர்வமோ அதைவிட புது புது கார்களை வாங்கி வீட்டு வாசலில் நிறுத்துவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பிருத்விராஜ். பிருத்விராஜ் இதுவரை, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110, ரேஞ்ச் ரோவர் வோக் மினி கூப்பர் ஜேசிடபிள்யூ மற்றும் போர்ஷே கேயென்னே போன்ற கார்களை வைத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டாடா சஃபாரி காரை வைத்து இருக்கிறார்.

லம்போர்கினி உருஸ்

லம்போர்கினி உருஸ்

நடிகர் பிருத்விராஜ் தற்போது லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார். தனது விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் காரை விற்பனை செய்து விட்டு, பழைய லம்போர்கினி உருஸ் காரை பிருத்விராஜ் வாங்கியுள்ளார். இந்தியாவின் பிரபலங்கள், நட்சத்திரங்கள் பலர் விரும்பி வாங்கும் காராக லம்போர்கினி உருஸ் கார் உள்ளது.

ஃபேன்சி நம்பர் பிளாட் செலவு

ஃபேன்சி நம்பர் பிளாட் செலவு

லம்போர்கினி உருஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.15 முதல் 3.43 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் பிருத்விராஜ் வாங்கி உள்ள கார் செகண்ட் ஹேன்ட் என்பதால் அவர் என்ன விலைக்கு வாங்கினார் என்று தெரியவில்லை. மேலும் அவர் வாங்கி உள்ள கார் கருப்பு நிறமாகும். ஃபேன்சி நம்பர் பிளாட்டுக்காக மட்டுமே அவர் ரூ.7 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

வாழ்த்திய ரசிகர்கள்

வாழ்த்திய ரசிகர்கள்

லம்போர்கினி நிறுவனத்தின் கார்களில் உருஸ் முதன்மையாக இடத்தில் உள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 12.8 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை லம்போர்கினி உருஸ் கார் பெற்றுள்ளது. பிருத்விராஜ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் உருஸ் எஸ்யூவியின் ஆல் பிளாக் வெர்ஷனை வீடியோவாக பகிர்ந்துள்ளார். லம்போர்கினி உருஸ் காரை வாங்கிய பிருத்விராஜிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடுவா

கடுவா

பிருத்விராஜ் தற்போது, ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ரன்னி என்ற சிறிய நகரத்தில் நடந்து வருகிறது. ஆடுஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தை பிளெஸ்ஸி இயக்கி வருகிறார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 30 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்திற்கு இசையமைத்து மலையாள சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X