»   »  ரிலீப் ஆன மல்லிகா!

ரிலீப் ஆன மல்லிகா!

Subscribe to Oneindia Tamil

வாத்தியார் படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகளே இல்லாமல் வெதும்பிக் கிடந்த மல்லிகா கபூருக்கு ஜித்தன் ரமேஷ்நடிக்கப் போகும் புதிய படத்தில் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளார்.

ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா அளவுக்கு மூத்த மகன் ரமேஷ் ஜொலிக்கவில்லை. தமிழை சேரிபாஷை மாதிரி பேசும் ரமேஷ் தேறாததால் அப்பாவுக்கு ஏமாற்றம்தான். ஜீவா ஒரு வழியாக தலையெடுத்துவிட்டார். அடுத்து ரமேஷை தேற்றுவதுதான் தனது லட்சியம் என்கிறாராம் செளத்ரி.

இதனால் ரமேஷை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கப் போகிறார் செளத்ரி. வழக்கம் போலஇந்தப் படங்களையும் புதுமுக இயக்குநர்களை வைத்தே எடுக்கப் போகிறாராம்>. இதற்காக சீரியஸாக கதைகேட்டு வருகிறார்.

இதற்கிடையே ரமேஷ் நடிக்க, மனதோடு மழைக்காலம் படத்தைத் தயாரித்த நிறுவனம் புலி வருது என்ற பெயரில்புதுப் படம் ஒன்றை எடுக்கவுள்ளது. இதில் ரமேஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பலரையும் அணுகினர்.ஆனால் யாரும் ஆப்புடலை.

இறுதியில் மல்லிகா கபூரை பிடித்துப் போட்டிருக்கிறார்கள். படத்தில் ரமேஷுக்கும், மல்லிகாவுக்கும் கலக்கலானவேடம். குறிப்பாக மல்லிகாவுக்கு கிளாமரோ, கிளாமர் ரோலாம். கிளாமர் வெப்பில் ரசிகர்களை சிக்க வைக்கமல்லிகாவும் தயாராகி வருகிறார்.

வாத்தியார் படத்தில் கலக்கல் கிளாமரில் நடித்தும் சரியான பட வாய்ப்பு இல்லாமல் அவஸ்தைப்பட்டார் மல்லிகா.படத்தின் ஹீரோயினான தன்னை விட என்னடி முனியம்மா ரீமிக்ஸ் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சுஜாவுக்குத்தான்சூப்பரான பெயர் கிடைத்ததால் அப்செட் ஆகி விட்டார்.

அந்த ஒத்தப் பாட்டு கொடுத்த ஏற்றத்தால் சுஜாவை நோக்கி வாய்ப்பாறு பாயத் தொடங்கியுள்ளது. சுஜாவைநினைத்து புழுங்கிக் கொண்டிருந்த நிலையில்தான் புலி வருது வாய்ப்பு மல்லிகாவுக்கு வந்ததாம்.

இந்த வாய்ப்பை வைத்து மறுபடியும் ஒரு முங்கு முங்கி எழ ஆர்ப்பாட்டமாக உள்ளாராம் மல்லிகா.

இதேபோல ஜீவா நடிக்க தெனாவெட்டு என்ற ஒரு புதிய படத்தையும் புலி வருது யூனிட் தயாரிக்கவுள்ளது.காமெடி என்னவென்றால் இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஆளே கிடைக்காமல் சிக்கலில் தொக்கிநிற்கிறாராம் தயாரிப்பாளர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil