»   »  'ரிக்ஷாக்காரன்' மம்முட்டி!

'ரிக்ஷாக்காரன்' மம்முட்டி!

Subscribe to Oneindia Tamil


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் வேடத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க, அதே பெயரில் ஒரு படம் மலையாளத்தில் உருவாகிறது.

Click here for more images

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர், மஞ்சுளா நடிப்பில் உருவாகி வெளியான படம் ரிக்ஷாக்காரன். பெரும் வெற்றியைப் பெற்ற அப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் எம்.ஜி.ஆர். வாங்கினார்.

தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்க ரிக்ஷாக்காரன் என்ற பெயரிலேயே ஒரு படம் உருவாகவுள்ளது. மம்முட்டியும் ரிக்ஷாக்காரன் வேடத்தில் நடிக்கிறார்.

பத்மகுமார் இயக்குகிறார். இப்படத்துக்கு முதலில் தீப்பட்டி சந்திரன் என்று பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்பெயரை தற்போது ரிக்ஷாக்காரன் என மாற்றியுள்ளனர்.

ரிக்ஷா ஓட்டியாக இப்படத்தில் வருகிறார் மம்முட்டி. அவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே படத்தின் கதையாகும்.

இரண்டு முறை இப்படத்தின் ஷூட்டிங் தேதி தள்ளிவைக்கப்பட்டது. படத்தின் தலைப்பு சரியில்லை என்ற காரணத்தால்தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது. தற்போது வாத்தியார் நடித்த படத் தலைப்பை வைத்துள்ளதால் விரைவில் ஷூட்டிங்கைத் தொடங்குகின்றனராம்.

Read more about: mmmooka, rikshakkaran
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil