அடேங்கப்பா 73 வயதிலும் இப்படியா?.. மகன் துல்கருடன் போட்டி போடும் மம்மூட்டி.. கெத்தா இருக்காரே ப்பா
சென்னை: மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளியான டர்போ, பிரமயுகம் ஆகிய படங்களில் பிரமயுகம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக பசூகா என்ற படம் வெளியாகவிருக்கிறது. மேலும் கௌதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார் அவர். 73 வயதாகும் மம்மூட்டி இப்போது படு பிஸியாக இருப்பதை பார்த்து திரையுலகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தச் சூழலில் மம்மூட்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
முகம்மது குட்டி பனம்பரிம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரை கொண்டவர் மம்மூட்டி. கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மம்மூட்டி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு இருந்தார்.

சினிமாவில் என்ட்ரி: அதன்படி 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த அவருக்கு 1976ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைக்க அவரது வாசுதேவனின் இயக்கத்தில் தேவலோகம் படத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மம்மூட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.
எதார்த்தமான ஹீரோ: மம்மூட்டியை பொறுத்தவரை தனது நடிப்பில் எந்த விதமான அலட்டலையும் காட்டிக்கொள்ளாதவர். தனது முக பாவனையிலேயே அனைத்தையும் சொல்லி அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதனால்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள திரையுலகில் மம்மூட்டிதான் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ஹீரோ என்பதும் நினைவுகூரதக்கத்து.
தமிழில் மம்மூட்டி: மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழிலும் நடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் மற்றும் 1991ஆம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மெகா ஹிட் படமாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி. அந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மம்மூட்டி நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படியும்; ஒரு பெரிய டான் எவ்வளவு பக்குவமாக இருப்பாரோ அப்படியும் நடித்து அதகளப்படுத்தியிருந்தார். அதேபோல் தமிழில் அவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன.
லேட்டஸ்ட் படங்கள்: மம்மூட்டியின் நடிப்பில் கடைசியாக டர்போ, பிரமயுகம் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றி டர்போ சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் பிரமயுகம் படமோ சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் மம்மூட்டி தனது நடிப்பில் மிரட்டியிருந்தார். அடுத்ததாக பசூகா, டாமினிக் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. கண்டிப்பாக இந்தப் படங்களும் ஹிட்டடிக்கும் என்று மம்முக்கா ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் புகைப்படம்: மம்மூட்டிக்கு இப்போது 73 வயது ஆகிறது. இந்நிலையில் மம்மூட்டியின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் வெள்ளை நிற டி ஷர்ட் மற்றும் ஊதா நிற ஜீன்ஸ் அணிந்தபடி படு ட்ரெண்டியாக இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யப்பா 73 வயதிலும் இப்படி இருக்கிறாரே. தனது மகன் துல்கர் சல்மானுக்கே டஃப் கொடுக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











