சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
மலையாள நடிகர் மம்முட்டியும் - கமலும் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நடிகர் கமல் அல்ல இயக்குநர் கமல் என்பதுதான் முக்கிய அம்சம்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மம்முட்டி, மீனா, பத்மப்ரியா நடித்த 'கருத்த பக்ஷிகள்' என்ற மலையாள திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமின்றி சிறந்த குடும்பப் படம் என்ற தேசிய விருதையும் வென்றது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கியிருந்தார்.

மம்முட்டி - கமல்
தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மம்முட்டி மற்றும் இயக்குனர் கமல் இணைந்து ஒரு படத்தை மலையாள திரைப்பட ரசிகர்களுக்கு உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

சிற்பியாக மம்முட்டி
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் மம்முட்டி சிற்பியாக நடிக்கவுள்ளாராம். ஆர்.எஸ். ரஃபீக் திரைக்கதை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாம்.

டிவி தொகுப்பாளினி ஹீரோயின்
மலையாள தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவுக்கு வந்த ஜெவல் மேரி இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

பாஸ்கர் தி ராஸ்கல்
தற்போது மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை விஜய் நடித்த 'ப்ரெண்ட்ஸ், காவலன் போன்ற படங்களை இயக்கிய சித்திக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











