கட்டாந்தரையில் கையை வைத்து தூங்கும் மம்முட்டி... ரசிகர்கள் உருக்கம்

திருவனந்தபுரம் : மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் மம்முட்டி. இவரது இயல்பான நடிப்பு இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்போது இவர் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி மலையாளத்தில் முன்னணி நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர். இவரது நடிப்பில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கிலும் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

நண்பகல் நேரத்து மயக்கம் படம்

நண்பகல் நேரத்து மயக்கம் படம்

மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிச்சேரி என்பவரது இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் மம்முட்டி இந்தப் படத்தில் தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை வெறும் 17 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் லிஜோ ஜோஸ்.

லிஜோ ஜோஸ் இயக்கம்

லிஜோ ஜோஸ் இயக்கம்

முன்னதாக அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதைக்களங்களுடன் புதியவர்களையும் குணச்சித்திர நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கி வந்த லிஜோ ஜோஸ் முதல் முறையாக மலையாளத்தின் லீட் ஹீரோவான மம்முட்டியை வைத்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

வித்தியாசமான டீசர்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தலைப்பின் காரணமாகவோ என்னவோ இந்த டீசரில் ஆடு, கோழி முதல் படத்தின் கேரக்டர்கள் அனைவரும் தூங்கும் வகையில் அமைந்துள்ளது.

கட்டாந்தரையில் தூங்கிய மம்முட்டி

கட்டாந்தரையில் தூங்கிய மம்முட்டி

நடிகர் மம்முட்டியும் கட்டாந்தரையில் கையை வைத்து தூங்கும்படியாக இந்த டீசரில் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை மம்முட்டியே தனது மம்முட்டி கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X